Automobile Tamilan

BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா

Mahindra BE 6 Batman Edition

அறிமுகத்தின் பொழுது 300 யூனிட்டுகளாக அறிவிக்கப்பட்டு ரூ.27.79 லட்சத்தில்  மஹிந்திராவின் BE 6 பேட்மேன் எடிசன் மாடலின் உற்பத்தி எண்ணிக்கை தற்பொழுது 999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகப்படியான வரவேற்பினை தொடர்ந்து உற்பத்தி எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.

பல்வேறு இடங்களில் பேட்மேன் லோகோ மற்றும் ஸ்பெஷல் பேட்ஜிங், இன்டீரியரில் சில இடங்களில் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்டு மிக நேர்த்தியான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெம்பர் பிளேட் 001-999 வரை கொடுக்கப்பபட்டு, பேட்மேன் லோகோ பல்வேறு இடங்களில் உள்ளது.

79Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள பிஇ 6 வேரியண்ட் பவர்  286hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 656 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது. சார்ஜர் மற்றும் பொருத்துதல் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். 7.2 kW சார்ஜருக்கு ₹50,000 கூடுதலாகவும் அல்லது 11.2 kW சார்ஜருக்கு ₹75,000 ஆகும்.

வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முன்பதிவு காலை 11 மணிக்கு துவங்கப்பட உள்ளது. சர்வதேச பேட்மேன் தினமான செப்டம்பர் 20 ஆம் தேதி டெலிவரி வழங்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version