Automobile Tamilan

மஹிந்திராவின் BE 6 காரின் டாப் வேரியண்ட் விலை வெளியானது.!

mahindra be 6e suv front

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் காட்சிப்படுத்திய புதிய BE 6 அல்லது BE 6e மாடலின் டாப் வேரியண்டின் விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற வேரியண்டுகளின் விலை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் கூடுதலாக இந்த முறை முன்பதிவு விபரம் மற்றும் டெலிவரி தொடர்பான விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

BE 6 மாடலில் 59kwh மற்றும் 79Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்ற நிலையில் டாப் வேரியண்ட் தற்பொழுது 79kwh கொண்டு 19 அங்குல வீல் பெற்றுள்ள மாடலின் விலை ரூபாய் 26.90 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வரை வெளிவந்த BE 6 விலை பட்டியல்.,

ஆனால் வீட்டில் சார்ஜ் செய்வதற்கான சார்ஜருக்கு மற்றும் பொருத்துவதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஇ 6 மாடலின் 59kWh வேரியண்ட் 231hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் ரேஞ்ச் 535 கிமீ (ARAI) மற்றும் டாப் மாடலில் உள்ள 79kWh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் 286hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 682Km (ARAI) அல்லது 550km ரேஞ்ச் (WLTP) வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டாப் வேரியண்டில் 6.7 வினாடிகளில் 0-100kph வேகத்தை எட்டும் என மஹிந்திரா குறிப்பிடும் நிலையில் இந்த காரில் ரேஞ்ச், எவ்ரிடே மற்றும் ரேஸ் என மூன்று டிரைவ் மோடுகளை கொண்டுள்ளது.

BE 6 வாரண்டி விபரம்;

முதல் உரிமையாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பேட்டரி வாரண்டி வழங்கப்படும் என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இரண்டாவது உரிமையாளர் என்றால் வாரண்டி 10 ஆண்டுகள் அல்லது 2 லட்சம் கிமீ ஆக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி மெட்ரோ நகரங்களில் டெஸ்ட் டிரைவ் துவங்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு பிப்ரவரி 14, 2025 முதல் துவங்கப்பட உள்ள நிலையில் BE 6 டாப் 79Kwh வேரியண்ட் டெலிவரி மார்ச், 2025 முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளது.

Exit mobile version