
மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பொலிரோ மற்றும் பொலிரோ நியோ என இரு வாகனங்களிலும் போல்டு எடிசன் என்ற பெயரில் கூடுதல் ஆக்செரீஸ் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.
வழக்கமான மாடலை விட கூடுதலாக ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டுள்ள பொலிரோ மற்றும் பொலிரோ நியோவில் எவ்விதமான எஞ்சின் மற்றும் வசதிகள் சார்ந்தவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்துள்ளது.
வழக்கமான மாடலில் இருந்து வேறுபடுத்தி டிசைன் வடிவமைப்பினை கொண்ட புதிய போல்டு பொலிரோ எடிசனின் முன்பக்க கிரில் மற்றும் பம்பரில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இன்டீரியரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இருக்கைகளுடன் அப்ஹோல்ஸ்ட்ரி கருப்பு நிறத்தை பெற்றதாக அமைந்துள்ளது. கதவுகளுக்கான சில் பிளேட்ஸ், மேட் உள்ளிட்டவை கூடுதலாக தரப்பட்டுள்ளது.
B4, B6, B6 Opt என மூன்று வேரியண்டுகளிலும் பொதுவாக 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 76hp மற்றும் 210 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மற்ற வழக்கமான மாடலை விட ரூ.20,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
மஹிந்திரா பொலிரோ போல்டு எடிசன் விலை ரூ.10.02 லட்சம் முதல் ரூ.11.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை அமைந்துள்ளது.
99hp மற்றும் 260 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ள பொலிரோ நியோ போல்டு எடிசனில் பல்வேறு இடங்களில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கிரில், ரூஃப் ரெயில்கள், வீல் ஆர்சு உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டுள்ளது.
இன்டீரியரில் கருப்பு இருக்கை மற்றும் ஸ்டீயரிங் அப்ஹோல்ஸ்டரி கருப்பு நிறத்துடன் மற்றும் மெத்தைகள், மேட் உள்ளிட்ட வசதிகளுடன் ரியர் வியூ கேமரா வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இது வழக்கமான மாடலை விட ரூ.40,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.
மஹிந்திரா பொலிரோ நியோ போல்டு எடிசன் விலை ரூ.11.90 லட்சம் முதல் ரூ.12.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை அமைந்துள்ளது.