Categories: Car News

9 சீட்டர் மஹிந்திரா பொலிரோ நியோ+ விற்பனைக்கு அறிமுகமானது

Mahindra Bolero Neo+ 9 seater

ரூ.11.39 லட்சம் விலையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ+ காரில் 9 இருக்கைகளுடன் P4, P10 என இரண்டு வேரியண்டுகளில் வெளியிடப்பட்டு கருப்பு, சில்வர் மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.

Mahindra Bolero Neo Plus

பொலிரோ நியோ பிளஸ் காரில் 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸூடன் அதிகபட்சமாக 119 hp பவர் மற்றும் 280Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

9 இருக்கைகளை பெற்ற பொலிரோ நியோவில் 2+3+4 என இருக்கை வரிசை அமைக்கப்பட்டு பின்புறத்தில் பெஞ்ச் இருக்கையாக வழங்கப்பட்டுள்ளது. இன்டிரியரில் டாப் P10 வேரியண்டில் 22.8 செமீ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சிஸ்டத்தை பெற்று ஃபேபரிங் அப்ஹோல்ஸ்ட்ரி கொண்டதாக அமைந்துள்ளது.

பாதுகாப்பு வசதிகளில், இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, குழந்தைகளுக்கான லாக், அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் ரிமைன்டர் என பலவற்றை கொண்டதாக அமைந்துள்ளது.

2680 மிமீ வீல் பேஸ் கொண்டுள்ள பொலிரோ நியோ பிளஸ் விலை ரூ.11.39 லட்சம் முதல் ரூ.12.49 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட், ஆட்டோமோட்டிவ் துறையின் CEO, நளினிகாந்த் கொல்லகுண்டா அறிமுக குறித்து பேசுகையில், பொலிரோ பிராண்ட் பல ஆண்டுகளாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியான மற்றும் நம்பகத்தன்மையின் அடையாளமாக மாறியுள்ளது,

9 இருக்கை Bolero Neo+ அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மற்றும் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கும் ஒரே மாதிரியான ஓட்டுநர் அனுபவத்தை வளப்படுத்துவதுடன், சிறப்பான ஆயுள், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் சிறந்த வசதிக்கான வாக்குறுதியை நாங்கள் வழங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.

Share
Published by
நிவின் கார்த்தி