Home Car News

மஹிந்திரா KUV100 NXT எஸ்.யு.வி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

தொடக்கநிலை சந்தையில் உள்ள மாடல்களுக்கு போட்டியாக விற்பனை செய்யப்படுகின்ற கேயூவி100 மினி எஸ்யூவி மாடலின் மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா KUV100 NXT எஸ்.யு.வி அக்டோபர் 10 ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட்ட உள்ளது.

மஹிந்திரா KUV100 NXT எஸ்.யு.வி

இந்திய சந்தையின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனத்தின் கேயூவி100 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக வெளியாக உள்ளது.

தோற்ற அமைப்பில் முகப்பில் புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் பம்பரை பெற்றதாக ஸ்கிட் பிளேட் மற்றும் புதிய 15 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல், வீல் ஆர்ச், எல்இடி டெயில் விளக்குகள் ஆகியவற்றை பெற்றிருக்கின்றது. விற்பனையில் உள்ள மாடல் 3675 மிமீ பெற்றிருந்த நிலையில் தற்போது நீளம் 3,700 மிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிறங்களில் மொத்தம் 6 வகையான வண்ணங்களுடன் கூடுதலாக 3 வகையில் இருவிதமான வண்ண கலவை பெற்றதாக வந்துள்ளது.

இன்டிரியர் வசதிகளில் சில மேம்பாடுகளுடன் டாப் வேரியன்ட் மாடலில் புதிய 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதிக்காக மேப் மை இந்தியா ஆதரவினை பெற்றதாக வரவுள்ளது. முன்பு 5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் கிடைத்து வந்த கேயுவி100, இனி 6 இருக்கை ஆப்ஷன் அடிப்படையாகவும், 5 இருக்கை தேர்வு ஆர்டரின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

முந்தைய எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை, ஆனால் எஞ்சின் இரைச்சல் மற்றும் அதிர்வுகள் போன்றவற்றில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டிருப்பதனால், சிறப்பான எரிபொருள் சிக்கனம் கொண்டதாக கேயூவி100 நெக்ஸ்ட் விளங்க உள்ளது.

82 bhp at 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

77 bhp at 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100  எஸ்யூவி காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

தற்போது 24 வேரியன்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த எஸ்யூவி இனி K2+, K4+, K6+, K8 மற்றும் K8+ என மொத்தம் 10 வேரியன்ட்கள் மட்டுமே கிடைக்க உள்ளது. வருகின்ற அக்டோபர் 10, 2017 அன்று கேயூவி100 நெக்ஸ்ட் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

மஹிந்திரா KUV100 NXT படங்கள்

image –> Youtuber Vansh

Exit mobile version