அறிமுகமானது மகேந்திரா ஸ்கார்பியோ S9; விலை ரூ 13.99 லட்சம்

மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான S9 ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் எஸ்யூவி-க்களின் விலை 13.99 லட்சமாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த எஸ்யூவி-க்களை இந்தியாவில் உள்ள மகேந்திரா நிறுவன டீலர்களில் வாங்கி கொள்ளலாம். மகேந்திரா ஸ்கார்பியோ S9 வகை பல்வேறு பிரிமியம் வசதிகளை கொண்டதாக இருப்பதுடன் mHAWK டீசல் இன்ஜின் கொண்டதாக இருக்கும்.

மகேந்திரா S9 வகை குறித்து பேசிய மகேந்திரா & மகேந்திரா நிறுவன சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் ஆட்டோமேடிவ் பிரவு உயர்அதிகாரி விஜேய் ராம் நகரா, இந்திய ஆட்டோ இண்டஸ்ட்ரீயின், வடிவத்தையே ஸ்கார்பியோ கார்கள் மாற்றியுள்ளது. இதுமட்டுமின்றி எஸ்யூவி கார்களில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. புதிய ஸ்கார்பியோ S9 கார்களில் பல்வேறு புதிய வசதிகளுடன், கவர்ந்திழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஸ்கார்பியோ காரின் உண்மையான ஆற்றலை அறிந்து கொள்வதுடன், சிறந்த டிரைவிங்களுக்கான அனுபவத்தை பெறலாம் என்றார்.

இந்த காரில் இடம் பெற்றுள்ள வசதிகளை பொருத்தவரை, ஸ்கார்பியோ S9 எஸ்யூவி-களில் முழுவதும் ஆட்டோமெடிக்காக இயங்கும் காலநிலை கட்டுபாடு, 15-செமீ டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட்களுடன் ஜிபிஎஸ் நேவிகேஷன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 மொழிகளை புரிந்து கொள்ளும் வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், ஸ்டாட்டிக் பெண்டிங் புரொஜெக்டர் ஹெட்லைட்கள், LED லைட் கைட்ஸ், ORVMகளுடனான சைட்-டேர்ன் இன்டிக்கேட்டர் மற்றும் ஆடியோ & குரூஸ் கண்ட்ரோல் கொண்ட ஸ்டீயரிங் பொருத்தப்பட்டுள்ளது.

மகேந்திரா ஸ்கார்பியோ S9 கார்களில் இன்டெலிபார்க் வசதிகளாக, குஷன் சஸ்பென்சன் & ஆண்டி-ரோல் தொழில்நுட்பகள் இடம் பெற்றிருக்கும். இதுமட்டுமின்றி mHAWK டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின்களுடன் மைக்ரோ-ஹைபிரிட் தொழில்நுட்பங்கள் உள்ளன. மேலும் இதில் இடம் பெற்றுள்ள இன்ஜின் அதிகபட்ச ஆற்றலில் 140bhp மற்றும் பீக் டார்க்யூவாக 320 Nm கொண்டிருக்கும். மேலும் இந்த இன்ஜின் 6-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், S9 கார்களில், டூயல் பிராண்ட் ஏர்பேக்ஸ், ஆண்டி லாக் பிறேகிங் சிஸ்டம், முன்புறத்தில் பனிகால லேம்ப்கள், திருட்டை நடப்பதை எச்சரிக்கும் வசதி, அவசர கால பிரேக் எச்சரிக்கை மற்றும் இன்ஜின் இம்மோபைலசர். ஹைடிராலிக் அசிஸ்ட் பென்னட்களும் பொருத்தப்பட்டுள்ளது.