மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பற்றி தெரிந்து கொள்வோம்

ed992 mahindra xuv300 suv

வருகின்ற பிப்ரவரி 2019 யில் விற்பனைக்கு வெளியாக உள்ள மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 எஸ்யூவி மாடலின் முக்கிய விபரங்கள், என்ஜின், விலை போட்டியாளர்கள் உட்பட பல்வேறு விபரங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300

மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 எஸ்யூவி மஹிந்திரா நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற கொரியாவின் சாங்யாங் நிறுவனத்தின் உலக பிரசத்தி பெற்ற டிவோலி எஸ்யூவி பிளாட்பாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த காரில் மிக சிறப்பான நவீன வசதிகள் மற்றும் விலைக்கு தகுந்த மதிப்பை வழங்குவதுடன் போட்டியாளர்களை விட மிக சிறப்பான வசதிகளை பெற்றிருக்கும்.

மஹிந்திராவின் சிறுத்தைப்புலி தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்ட முதல் எக்ஸ்யூவி500 மாடலை தொடர்ந்து இரண்டாவது அதே தோற்ற உந்துதலில் கட்டமைக்கப்பட்டுள்ள எக்ஸ்யூவி300 கார் மிக சிறப்பான பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குடன், புராஜெக்டர் முகப்பு விளக்கு, மஹிந்திராவின் நேர்த்தியான பாரம்பரிய கிரில் அமைந்திருக்கின்றது. பக்கவாட்டில் டைமன்ட் கட் அலாய் வீல், ரூஃப் மவன்டேட் ஸ்பாய்லர், எல்இடி டெயில் விளக்கு ஆகியவற்றை பெற்றுள்ளது.

நேர்த்தியான இருக்கை அமைப்புடன், எக்ஸ்.யு.வி. 300 பாரத் கிராஷ் டெஸ்ட் (Bharat New Vehicle Safety Assessment Program -BNVSAP) தரத்துக்கு ஏற்றதாகவும், டாப் W8 வேரியன்டில் அதிகபட்சமாக 7 காற்றுப்பைகள், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார் ஏபிஎஸ் , இபிடி போன்றவற்றை பெற்றதாக விளங்கும். இந்த எஸ்யூவி W2, W4, W6 மற்றும் W8 என மொத்தம் நான்கு விதமான வேரியன்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

 

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ள இந்த மாடலில் 200 என்எம் டார்க் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 300 என்எம் டார்க் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இரு என்ஜினிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். பவர், டார்க் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை. வரும் காலத்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 4 மீட்டருக்கு குறைந்த எஸ்யூவி மாடல்களான மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹோண்டா WR-V, ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் நிசான் கிக்ஸ் உள்ளிட்ட மாடல்களை நேரடியாக மஹிந்திரா XUV300 எதிர்கொள்ள உள்ள எஸ்யூவி பிப்ரவரி மாதம் 15ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 எஸ்யூவி விலை ரூ. 8 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 படங்கள்

 

Exit mobile version