Automobile Tamilan

புதிய வசதிகளுடன் AX5 S வேரியண்ட பெற்ற மஹிந்திரா XUV700

mahindra xuv700

மஹிந்திராவின் நடுத்தர எஸ்யூவி சந்தையில் பிரபலமாக உள்ள XUV700 மாடலில் AX5 S என்ற புதிய வேரியண்டில் 10.24 அங்குல கிளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியிடப்படுள்ள மாடலின் ஆரம்ப விலை ரூ.16.89 லட்சத்தில் கிடைக்கின்றது.

XUV700 எஸ்யூவி காரில் தொடர்ந்து 2.0L டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 200 bhp மற்றும் 380 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 2.2L டர்போ டீசல் என்ஜின் 185 bhp பவர் மற்றும் 420 Nm டார்க் (450Nm automatic) வெளிப்படுத்தும் நிலையில் இரு மாடல்களிலும் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

7 இருக்கை பெற்றுள்ள AX5 S வேரியண்டில்  10.24 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உடன் Adrenox 75+ இணைக்கப்பட்ட அம்சங்களை பெறுகின்றது. 10.24 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்றது. 6 ஸ்பீக்கர்கள் சவுண்ட் ஸ்டேஜிங்குடன்,  3 வது வரிசை ஏசி வென்ட் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் கப் ஹோல்டருடன் 2 வது வரிசை இருக்கை, 60;40 மடக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பெறுகின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை ரூ.13.99 லட்சம் முதல் ரூ.26.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது.

(எக்ஸ்ஷோரூம்)

 

Exit mobile version