மாருதியின் மிக சிறப்பான எண்ணிக்கையில் விற்பனை ஆகின்ற மாடல்களில் மாருதி பெலினோ ஹேட்ச்பேக் காரும் ஒன்றாகும். இந்த மாடலின் ஆல்பா வேரியன்டில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு வந்த குறைந்த நாட்களிலே 2 லட்சத்துக்கு மேற்பட்ட பெலினோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் பெலினோ மாடலில் ஆர்எஸ் வேரியன்டும் கிடைத்து வருகின்ற சூழ்நிலையில் டெல்டா மற்றும் ஜெட்டா போன்றவற்றில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த சிவிடி ஆப்ஷன் தற்போது ஆல்பா வேரியன்டிலும் வழங்கப்பட்டுள்ளது.
ஆல்பா சிவிடி வேரியன்டில் தற்போது புராஜெக்டர் முகப்பு விளக்கு, அலாய் வீல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றின் ஆதரவினை பெற்ற ஸ்மார்ட்ப்ளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்க பெறுகின்றது.
மேலும் இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றதாக விளங்குகின்றது.
ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் 75PS ஆற்றல் மற்றும் 190Nm டார்க் தரும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் 85PS ஆற்றல் மற்றும் 115Nm டார்க் தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
பலேனோ இந்தியா மட்டுமல்லாமல் 100க்கு மேற்பட்ட வெளிநாடுகளுக்கு இந்தியாவினை ஏற்றுமதி மையமாக கொண்டு செயல்பட உள்ளதால் ஜப்பான் , ஐரோப்பா , தென் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்த மாதம் முதல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
மாருதி பெலினோ ஆல்பா சிவிடி விலை ரூ.8.34 லட்சம் ஆகும்.