Automobile Tamilan

விட்டாரா பிரெஸ்ஸா இனி டொயொட்டா அர்பன் க்ரூஸர்

3317e maruti vitara brezza suv 1

மாருதி சுசூகியின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரவுள்ள டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்பாக டொயோட்டா நிறுவனம் மாருதியின் பலேனோ காரை கிளான்ஸா என்ற பெயரில் விற்பனை செய்து வரும் நிலையில் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட சந்தையில் மிகவும் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல்களில் விட்டாரா பிரெஸ்ஸா முன்னிலை வகித்து வருகின்றது. இந்த மாடலை ரீபேட்ஜ் செய்ய உள்ள டொயோட்டா இதற்கான அறிமுகத்தை விரைவில் மேற்கொள்ள உள்ளது.

பொதுவாக டொயோட்டா நிறுவனம் தனது பிரசத்தி பெற்ற உயர் ரக எஸ்யூவி கார்களான லேண்ட் க்ரூஸர், லேண்ட் க்ரூஸர் பிராடோ என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றது. அந்த வகையில் ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற கிராஸ்ஓவர் மாடலுக்கு அர்பன் க்ரூஸர் என்ற பெயரினை பயன்படுத்தி வருகின்றது. இந்நிலையில், இந்த பெயரினை மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ஜ் வெர்ஷனுக்கு பயன்படுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.

காரின் தோற்ற அமைப்பின் பொறுத்தவரை, முன்புற பம்பர் மற்றும் கிரில் அமைப்புகளில் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டிருக்கும். மற்றபடி பக்கவவாட்டு தோற்ற அமைப்பு, இன்டிரியரில் எந்த மாற்றங்களும் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆபஷனை பெற்ற உள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் விலை ரூ.7.50 லட்சத்தில் துவங்குவதுடன் ஆகஸ்ட் 2020-ல் விற்பனைக்கு வெளியாகலாம்.

source

Exit mobile version