Automobile Tamilan

கூடுதல் ஆக்செரீஸ் உடன் பலேனோ ரீகல் எடிசனை வெளியிட்ட மாருதி சுசூகி

marut suzuki baleno regal

மாருதி சுசூகியின் பிரசித்தி பெற்ற பலேனோ காரில் தற்பொழுது கூடுதலான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டு சிறப்பு ரீகல் எடிசன் ஆனது பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது.

சிறப்பு பதிப்பு பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு ஆப்ஷனிலும் கூடுதலாக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸிலும் கிடைக்கின்றது.

Sigma, Delta, Zeta, மற்றும் Alpha வேரியண்டுகளில் கிடைக்கின்ற ரீகல் எடிசனில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கூடுதலான சேர்க்கப்பட்ட வசதிகள் மூலம் ரூபாய்.45,829 முதல் ரூபாய் 60,199 வரை மதிப்பிலான துனைக் கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

முன் மற்றும் பின்புற அண்டர்பாடி ஸ்பாய்லர், மூடுபனி விளக்கு கார்னிஷ் மற்றும் கிரில், பின்புற கதவு மற்றும் பின் கதவு ஆகியவற்றில் குரோம் பூச்சூ மற்றபடி, பாடி-சைட் மோல்டிங், டோர் வைசர்கள் மற்றும் கூடுதல் குரோம் கைப்பிடி ஆகியவை பெற்றுள்ளது.

இன்டீரியரில் இரு வண்ண கலவை சீட் கவர், 3டி ஆல் வெதர் மேட்ஸ், ஜன்னல் திரை மற்றும் ஸ்டீயரிங் வீல் கவர், வேக்கம் கிளீனர், லோகோ புரொஜெக்டர் விளக்கு மற்றும் பாதுகாப்பு சில் கார்டுகள் போன்ற பல பாகங்களுடன் வருகிறது. 360 டிகிரி வியூ கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD), 9 இன்ச் SmartPlay Pro+ இன்ஃபோடெயின்மென்ட் போன்ற அம்சங்கள் உள்ளது.

Exit mobile version