2 நிமிடத்திற்கு 1 கார் என 19 லட்சம் டிசையர் கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி

இந்தியாவில் இரண்டு நிமிடத்திற்கு 1 கார் என விற்பனை ஆகின்ற மாருதி சுசுகி டிசையர் கார் விற்பனை எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம் விளங்குகின்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த மாருதி டிசையர் செடான் ரக மாடல், இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான செடான் ரக மாடல் என்ற பெருமையுடன், மொத்த விற்பனையில் பாதிக்கு மேல் டிசையரை தேர்ந்தெடுப்பவர்கள் முதல் தலைமுறை கார் வாங்குவோர்களாக உள்ளனர்.

மாருதி சுசுகி டிசையர்

தொடர்ந்து மாதந்திர விற்பனையில் முதல் இடங்களில் ஒரு காராக இடம்பெற்று வருகின்ற டிசையர் கார், மாதந்தோறும் சராசரியாக 21,000 எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் ரக மாடல் என்ற பெருமையுடன் காம்பேக்ட் ரக செடான் சந்தையில் 55 சதவீத பங்களிப்பை பெற்றதாக விளங்குகின்றது.

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் அறிக்கையில், மாருதி சுஸுகியின் பயணத்திற்கு டிசையர் பிராண்ட் முக்கிய பங்களிப்பாக விளங்குவதற்கு வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம், நாங்கள் அறிமுகம் செய்த டிசையர் மூலம் காம்பாக்ட் செடான் ரக பிரிவை உருவாக்கியுள்ளோம். பல ஆண்டுகளாக மாருதியின் டிசையர் வாடிக்கையாளர்களை கவருவதில் முன்னிலை வகிக்கின்றது. மேலும் இந்நிறுவன அறிக்கையில், மிக சிறப்பான வாடிக்கையாளர் வரவேற்பின் காரணமாக மூன்றாம் தலைமுறை டிசையர் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. டிசையரின் காரினை பாதிக்கு மேல் தேர்ந்தெடுப்பவர்கள் முதல் தலைமுறை கார் வாங்குவோர்களாக உள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.

1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் உள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் கார் விலை ரூ. 5.70 லட்சம் முதல் ரூ.9.54 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.