மாருதி சுசுகி எர்டிகா காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அறிமுகம்

தற்போது பொருதப்பட்டிருந்த 1.3 லிட்டர் ஃபியட் என்ஜினுக்கு மாற்றாக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்ற மாருதி சுசுகி எர்டிகா MPV மாடல் 9.68 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக இந்த என்ஜின் சியாஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்டது.

சமீபத்தில் ஏப்ரல் 2020 முதல் டீசல் என்ஜின் பெற்ற கார்களை விற்பனை செய்யப் போவிதில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்த நிலையில் சுசுகி புதிய காரை தற்போது இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

மாருதி சுசுகி எர்டிகா டீசல் விலை

1000 ரூபாய் கோடி முதலீட்டில் தனது சொந்த முயற்சியில் மாருதி சுசுகி உருவாக்கியுள்ள புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜினுக்கு DDiS225 என பெயரிட்டுள்ளது. இந்த என்ஜின் முதன்முறையாக சியாஸ் காரில் விற்பனைக்கு வந்திருந்தது. எர்டிகாவின் VDi, ZDi மற்றும் ZDi+ வேரியன்டுகளில் மட்டும் இந்த என்ஜினும், பேஸ் வேரியன்ட் LDi காரில் 1.3 லிட்டர் என்ஜின் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய என்ஜின் பெற்ற மாடல் முந்தைய வேரியன்டை விட ரூ.29,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

95 ஹெச்பி பவர் மற்றும் 225 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெற்ற டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினை மாருதி சுசூகி நிறுவனம் DDiS 225 என்ற பெயரில் குறிப்பிடுகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆராய் சான்றிதழ் படி எர்டிகா கார் மைலேஜ் லிட்டருக்கு 24.20 கிமீ ஆகும். இது முந்தைய 1.3 லிட்டர் மாடலை விட 1.27 கிமீ குறைவாகும்.

புதிதாக என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ள நிலையில், தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.

எர்டிகா கார் விலை பட்டியல்

வேரியன்ட் எர்டிகா 1.5
Ertiga VDi ரூ. 9.86 லட்சம்
Ertiga ZDi ரூ. 10.69 லட்சம்
Ertiga ZDi+ ரூ. 11.20 லட்சம்

(Ex-showroom delhi)