Automobile Tamilan

3 வருடங்கள் அல்லது 1,00,000 கிமீ ஆக வாரண்டியை அதிகரித்த மாருதி சுசூகி

இன்று ஜூலை 9, 2024 முதல் டெலிவரி பெற்ற அனைத்து மாருதி சுசூகி நிறுவன கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கான ஸ்டாண்டர்டு வாரண்டி 3 வருடங்கள் அல்லது 1,00,000 கிமீ (எது முதலில் வருகிறதோ அதுவரை) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த வாரண்டி 2 வருடங்கள் அல்லது 40,000 கிமீ ஆக இருந்தது.

நீட்டிக்கப்பட்ட வாரண்டியை தற்பொழுது வாடிக்கையாளர்கள்  6 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிமீ வரை நீட்டிக்கலாம்.

நிலையான உத்தரவாதம் என்ஜின், டிரான்ஸ்மிஷன், எலக்ட்ரிக் பாகங்கள், மெக்கானிக்கல் பாகங்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் ஆகியவற்றுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

swift vs baleno rear

நீட்டிக்கப்பட்ட வாரண்டி தற்பொழுது Platinum Package 4 வருடங்கள்/ 1.20 லட்சம் கிமீ, Royal Platinum Package 5 வருடங்கள்/ 1.40 லட்சம் கிமீ Solitaire Package 6 வருடங்கள்/ 1.60 லட்சம் கிமீ என மூன்று விதமாக வழங்கப்படுகின்றது.

MSIL, மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையின் மூத்த செயல் அதிகாரி திரு.பார்த்தோ பானர்ஜி வாரண்டி பற்றி கூறுகையில், “மாருதி சுசூகியின் வாகனங்களின் வாழ்நாள் முழுவதும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நாங்கள் பாடுபடுகிறோம். இந்த உறுதிப்பாட்டிற்கு இணங்க, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதற்காக, எங்கள் நிலையான உத்தரவாதத்தை 3 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ ஆக உயர்த்தியுள்ளோம். மேலும், 6 ஆண்டுகள் அல்லது 1,60,000 கிமீ வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாத திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம், மேலும் 4ஆம் ஆண்டு மற்றும் 5ஆம் ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பேக்குகளின் திருத்தியுள்ளோம். மேம்படுத்தப்பட்ட நிலையான உத்தரவாதம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட உத்தரவாத தொகுப்புகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியையும் மன அமைதியையும் வழங்குவதுடன் அவர்களின் ஒட்டுமொத்த உரிமையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version