Automobile Tamilan

மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி மைலேஜ் விபரம் வெளியானது

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கும் 5 கதவுகளை பெற்ற மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி காரின் மேனுவல் வேரியண்ட் மைலேஜ் 16.94 Kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 16.39 Kmpl வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது.

வரவிருக்கும் 5 கதவுகளை பெற்ற மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி கார்களை எதிர்கொள்ள உள்ள மாடலில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் ஜிம்னி காரில் இடம்பெற்றுள்ளது.

2023 Maruti Suzuki Jimny

சமீபத்தில் மாருதி ஜிம்னி காரின் உற்பத்தியை துவங்கிய மாருதி சுசூகி நிறுவனம், மீடியா டிரைவ் மூலம் மைலேஜ் விபரங்களை வெளியிட்டுள்ளது. விலை பட்டியல் ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம்.

சுசூகி கார்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் 1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் பெற்றிருக்கும்.

ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற வகையில் சுசூகி காரின் AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

மாருதி சுசூகி ஜிம்னி மைலேஜ் MT கியர்பாக்ஸ் 16.94 Kmpl மற்றும் AT மாடல் 16.39 Kmpl வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2023 முதல் முன்பதிவு நடைபெற்று வருகின்ற சுசூகி ஜிம்னி காருக்கு 30,000 க்கு மேற்பட்ட முன்பதிவுகள் நடைபெற்றுள்ளதால் காத்திருப்பு காலம் 6 முதல் 8 மாதங்களாக உள்ளது.

Exit mobile version