Automobile Tamilan

இன்னோவா ஹைக்ராஸ் மாருதி சுசூகி பிராண்டில் அறிமுகம்

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடிப்படையிலான பிரீமியம் 7 இருக்கை எம்பிவி ரக மாடலை மாருதி சுசூகி என்கேஜ் அடுத்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

டொயோட்டா-மாருதி சுசூகி கூட்டணியில் பல்வேறு மாடல்கள் ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் இந்தியா உட்பட பல்வேறு வளரும் நாடுகளில் விற்பனை செய்து வருகின்றன. இந்திய சந்தையில் பலேனோ அடிப்படையில் டொயோட்டா கிளான்ஸா, மாருதி கிராண்ட் விட்டாரா காரும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மாடலும் ஒரே பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Engage

டொயோட்டா-மாருதி இரு நிறுவனங்களுக்கிடையே கூட்டாண்மையின் ஒரு பகுதியாக டொயோட்டாவிடமிருந்து புதிய வலுவான ஹைப்ரிட் வாகனத்தை கொண்டு வரவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், புதிய பிரிவினை உருவாக்கும் வாகனமாக’ இருக்கும், அடுத்த இரண்டு மாதங்களில் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தும் என்றும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மாருதி தலைவர் RC பார்கவா கூறுகையில், “புதிய மூன்று வரிசைகள் கொண்ட ஹைப்ரிட்/கிரீனர் காராக இருக்கும், இதை நாங்கள் டொயோட்டாவிடமிருந்து பெறுவோம். இது ஒரு வகையான பாத் பிரேக்கர் வாகனம் மற்றும் அடுத்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளது.”

இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடிப்படையில் வரவுள்ள மாருதி சுசூகி என்கேஜ் எம்பிவி காரில் 172 hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 184 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின்களும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் – CVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.

இன்னோவா ஹைக்ராஸ் ஹைபிரிட் மைலேஜ் 23.24kpl மற்ற சாதாரன என்ஜின் மைலேஜ் 16.13kpl என உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version