Automobile Tamilan

புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் கான்செப்ட் CLA கிளாஸ் அறிமுகமானது

Mercedes-Benz CLA Class concept

முனிச் மோட்டார் ஷோ 2023 அரங்கில் காட்சிக்கு வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் கான்செப்ட் CLA கிளாஸ் ஆனது இந்நிறுவனத்தின் எதிர்காலத்தில் வரவிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்ளுக்கு அடிப்படையாக கொண்ட கான்செப்ட் ஆகும்.

மெர்சிடிஸ் ஓஎஸ் பெற உள்ள இந்த சிஎல்ஏ கிளாஸ் கான்செப்ட் இந்நிறுவனத்தின் நவீனத்துவமான வடிவமைப்பினை பெற்ற இன்டிரியர் மற்றும் எக்ஸ்ட்ரியர் கொண்டதாக அமைந்துள்ளது.

Mercedes-Benz Concept CLA Class

மிக அகலமான பெரிய ‘கிரில்’ கொண்டுள்ள CLA கிளாஸ் ஆனது கருப்பு நிறத்தை பின்புறத்தில் பெற்று, மையத்தில் ஒளிரும் வகையில் 3 புள்ளி ஸ்டார் மெர்சிடிஸ்-பென்ஸ் லோகோ அதைச் சுற்றியுள்ள ஏராளமான ஒளிரும் மற்றும் அனிமேஷன் வகையில் 3 புள்ளி நட்சத்திரங்கள் உள்ளன.

கான்செப்ட் CLA ஆனது கூபே போன்ற ரூஃப்லைனைப் பெறுகின்ற அதிகப்படியான கோணம் கொண்ட பின்புறத் திரையுடன் இணைந்து புதிய மாடலுக்கு நேர்த்தியான எல்இடி டெயில் லைட் அளிக்கிறது.

இன்டிரியர் ஆனது MBUX சூப்பர்ஸ்கிரீன் பெற்ற மெர்சிடிஸ்-பென்ஸ் ஆனது MB.OS இயங்குதளத்தை பெற்றுள்ளது. புதிய சிப்-டு-கிளவுட் கட்டமைப்புடன், கூகுள் மேப்ஸ் நேவிகேஷனை கொண்டுள்ளது. பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் ஆனது விரிச்சுவல் முறையில் வழங்கப்பட்டுள்ளது.

CLA கிளாஸ் மாடலில் லெவல் 3 லிடார் அடிப்படையாக கொண்ட தன்னாட்சி ஓட்டுநர் உதவி அமைப்புகளை பெற்றுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் மாடுலர் ஆர்க்கிடெச்சர் (Mercedes-Benz Modular Architecture -MMA) பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்ட கான்செப்ட் CLA கிளாஸ் எலக்ட்ரிக் மாடல் அதிகபட்சமாக 750 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில், சுமார் 12kWh/100 கிலோமீட்டர் வழங்கும் என கூறப்படுகின்றது.

800V மின்சார கட்டமைப்பைக் கொண்டுள்ள மாடல் மிக விரைவான 250kW DC சார்ஜிங்கை ஆதரவினை பெற்று 15 நிமிடங்களில் 400 கிலோமீட்டர் தூரத்தை சார்ஜை பெற முடியும்.

 

Exit mobile version