Automobile Tamilan

மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை 2 % உயருகின்றது

Mercedes benz a class

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட சில மாடல்களின் அடிப்படையில் விலையை 2 % வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து பல்வேறு மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் விலை அதிகரித்து வருகின்றனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலையை உயர்த்தியுள்ளதாக மெர்சிடிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக விலை உயர்வு பல்வேறு மாடல்களில் இருக்கும் நிலையில் ரூ. 2.6 லட்சம் வரை GLS மற்றும் ரூ. 3.4 லட்சம் வரை மெபேக் S 680 விலை உயர்த்தப்படலாம்.  நிலையான மற்றும் லாபகரமான வணிகச் செயல்பாட்டை உறுதி செய்வதற்காக சிலவற்றை ஈடுசெய்வதை விலைத் திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Exit mobile version