இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை சோதனையிடும் MG மோட்டார்

எம்ஜி eZS எஸ்யூவி

வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் எம்ஜி மோட்டரின் eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், தற்போது இந்திய சாலைகளில் சோதனையில் ஈடுபத்தி வரும் படம் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜூன் மாதம் விற்பனைக்கு வரவுள்ள ஹெக்டரை தொடர்ந்து இந்தியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ள எம்ஜி நிறுவன மாடலாக இஇசட்எஸ் விளங்க உள்ளது.

இளைய தலைமுறையினர் விரும்பும் ZS பெட்ரோல் வெர்ஷனை அடிப்படையாக கொண்ட எம்ஜி எலெக்ட்ரிக் ZS மாடலில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், NEDC சான்றிதழ் படி அதிகபட்சமாக 335 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். 0 – 50 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.1 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

ஹெக்டர் எஸ்யூவி ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது எலெக்ட்ரிக் மாடலாக எம்ஜி இ-இசட்எஸ் எஸ்யூவி டிசம்பர் 2019-ல் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

spy image source – autocarindia

Exit mobile version