Automobile Tamilan

குளோஸ்டரில் இரண்டு ஸ்ட்ரோம் எடிசனை வெளியிட்ட எம்ஜி

mg gloster desertstrom

100வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் எம்ஜி மோட்டார் தனது குளோஸ்டெர் எஸ்யூவி காரில் ஸ்னோஸ்ட்ரோம் மற்றும் டெசர்ட்ஸ்ட்ரோம் என இரு மாடல்களை ரூ.41.05 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஸ்ட்ராம் வரிசையில் Blackstorm உள்ள நிலையில் புதிதாக Snowstorm மற்றும் Desertstorm என மூன்றும் தற்பொழுது  2WD மற்றும் 4WD என இரு டிரைவ் ஆப்ஷனிலும் வந்துள்ளன.

குளோஸ்டெரின் ஸ்னோஸ்ட்ரோம் எடிசன் வெள்ளை நிறத்தை பெற்று கருப்பு நிற மேற்கூரையுடன் அலாய் வீல் முன்பக்க கிரில் என பல இடங்கள்ளில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இன்டிரியரில் 6 இருக்கை மட்டும் பெற்றுள்ள இந்த மாடலில் கருப்பு நிற அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் சிவப்பு நிற தையல் பெற்றுள்ளது.

குளோஸ்டெரின் டெசர்ட்ஸ்ட்ரோம் எடிசன் கோல்டன் நிறத்தை பெற்று அலாய் வீல் முன்பக்க கிரில் என பல இடங்கள்ளில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இன்டிரியரில் 6 மற்றும் 7 இருக்கை பெற்றுள்ள இந்த மாடலில் கருப்பு நிற அப்ஹோல்ஸ்ட்ரி பெற்றுள்ளது.

163 ஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பெற்றிக்கின்றது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்று 218 ஹெச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற 2.0 லிட்டர் ட்வீன் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இதிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

Exit mobile version