Automobile Tamilan

₹ 21.25 லட்சம் ஆரம்ப விலையில் எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்ட்ராம் விற்பனைக்கு வந்தது

MG Hector Blackstorm Edition

எம்ஜி மோட்டார் வெளியிட்டுள்ள புதிய ஹெக்டர் பிளாக்ஸ்ட்ராம் எடிசன் விலை ரூ.21.25 லட்சம் முதல் ரூ.22.76 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக இந்நிறுவனம் ஆஸ்டர், குளோஸ்டெர் கார்களில் பிளாக் ஸ்ட்ராம் எடிசனை வழங்கி வருகின்றது.

போட்டியாளர்களான டாடா மோட்டார்ஸ் டார்க் எடிசன் உட்பட மஹிந்திரா எக்ஸ்யூவி 700 பிளாக் நேப்போலி உள்ளிட்ட மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஹெக்டர் வெளியாகியுள்ளது.

MG Hector Blackstorm Edition

பிளாக்ஸ்ட்ராம் எடிசனில் முழுமையான கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வெளிப்புறத்தில் க்ரோம் பூச்சூ மற்றும் சிவப்பு நிற இன்ஷர்ட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

18 அங்குல அலாய் வீல் பெற்றதாக அமைந்துள்ள மாடலில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் ஸ்கிட் பிளேட் உள்ளிட்ட இடங்களில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹெக்டர் காரின் சென்டர் கன்சோல், ஏசி வென்ட்கள், டோர் டிரிம்கள் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றில் கன் மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்டு முழுமையான கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 5,6, மற்றும் 7 இருக்கை ஆப்ஷனில் முன்புற ஹெட்ரெஸ்ட்களில் ‘பிளாக்ஸ்டார்ம்’ பேட்ஜ் கருப்பு லெதரெட் அப்ஹோல்ஸ்டரியையும் பெறுகின்றன.

பல்வேறு வசதிகளில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 14-இன்ச் போர்ட்ரெய்ட் சார்ந்த தொடுதிரை அமைப்புடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஹெக்டர் எஞ்சின் விபரம்

ஹெக்டர் எஸ்யூவி காரில் 143hp, 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுல் மட்டுமே பெற்றுள்ள 170hp, 2.0-லிட்டர் டீசல் எஞ்சினும் உள்ளது.

எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்ட்ராம் விலை

ஹெக்டர் பிளாக்ஸ்ட்ராம் விலை ரூ.21.25 லட்சம் முதல் ரூ.22.76 லட்சத்தில் கிடைக்க துவங்கியுள்ளது.

MG HECTOR BLACKSTORM EDITION PRICE
Variant Price
MG Hector Blackstorm 1.5 petrol-CVT 5-seater ரூ. 21.25 லட்சம்
MG Hector Blackstorm 2.0 diesel-MT 5-seater ரூ. 21.95 லட்சம்
MG Hector Blackstorm 1.5 petrol-CVT 7-seater ரூ. 21.98 லட்சம்
MG Hector Blackstorm 2.0 diesel-MT 7-seater ரூ. 22.55 லட்சம்
MG Hector Blackstorm 2.0 diesel-MT 6-seater ரூ. 22.76 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

Exit mobile version