முதல் எம்ஜி மோட்டார் எஸ்யூவி பெயர் நாளை வெளியாகிறது

இந்தியாவில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடல் பெயர் விபரம் நாளை வெளியாக உள்ளது. எம்ஜி நிறுவனத்தின் எஸ்யூவி மாடல் ரூ.17 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

எம்ஜி எஸ்யூவி பெயர்

ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டணி நிறுவனமாக விளங்கும் SAIC மோட்டார் நிறுவனத்தின் அங்கமாக எம்ஜி மோட்டார் செயல்படுகின்றது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தலைமையிடம் இங்கிலாந்து ஆகும். இந்தியாவில் செவர்லே கார் நிறுவனம் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்தது. இதன் காரணமாக ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவிலிருந்து வெளியேறியது.

செவர்லே நிறுவனத்தின் ஹலோல் ஆலையை எம்ஜி மோட்டார் நிறுவனம் கையகப்படுத்தி , தனது மாடல்களை உற்பத்தி செய்ய உள்ளது. முதல் எஸ்யூவி மாடல் SAIC நிறுவனத்தின் மற்றொரு துனை நிறுவனமான Baojun வசமுள்ள Baojun 530 எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட மாடலை முதல் எஸ்யூவி காராக இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

இந்த எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜினை பெற்றிருக்கும். இந்த எஸ்யூவி மிக நேர்த்தியாக அமைந்திருப்பதுடன் ஹோண்டா சிஆர்-வி மாடலை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்க உள்ளது. 5 இருக்கைகளை கொண்ட எம்ஜி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரூ.17 லட்சம் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share