இந்தியாவில் ஜேஎஸ்டபி்யூ எம்ஜி மோட்டாரின் வின்ட்சர் இவி அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டினை நிறைவு செய்துள்ள நிலையில் அமோக வரவேற்பினை பெற்று 40,000க்கு கூடுதலான மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ள நிலையில் இன்ஸ்பையர் லிமிடெட் எடிசனை டிசைன் மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
BAAS திட்டத்தின் கீழ் ரூ.9.99 லட்சத்தில் கிடைக்கின்ற சிறப்பு எடிசன் கிமீ பயணத்துக்கு ரூ.3.90 காசுகளாக வசூலிக்கப்படும், ஆனால் முழுமையாக கட்டணத்தை செலுத்த விரும்பினால் விலை ரூ.16,64,800 ஆகும். இந்த வின்ட்சர் இன்ஸ்பையர் எடிசன் மொத்தமாக 300 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்க உள்ளது.
சிறப்பு எடிசனில் தனித்துவமான பேர்ல் ஒயிட் நிறத்தில் மேற்கூறை முன்பக்க பானெட் வரை ஸ்டாரி பிளாக் டூயல்-டோன் வெளிப்புறமும், R18 அங்குல பிளாக் அலாய் வீல்களும், ரோஸ் கோல்ட் கிளாடிங்குகளும் உள்ளன.
சொகுசான பயணத்துக்கு ஏற்ற ஆடம்பர வசதிக்காக 135 டிகிரி சாய்வு ஏரோ லான்ஞ்ச் இருக்கைகளுடன் கூடிய பிரீமியம் டூயல் டோன் உட்புறங்கள் சாங்ரியா ரெட் மற்றும் பிளாக் லெதர் அப்ஹோல்ஸ்டரியில் முடிக்கப்பட்டுள்ளன. ஸ்கைலைட் இன்ஃபினிட்டி வியூ பனரோமிக் சன்ரூஃப், கவர்ச்சிக்காக ஒளிரும் சில் பூசப்பட்ட மற்றும் வயர்லெஸ் சில் பிளேட்டுகளும் உள்ளது.
38kwh LFP பேட்டரியை பொருத்தப்பட்டு 136PS அல்லது 100KW பவர் வழங்கும் PMSM மோட்டார் ஆனது 200 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 331 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் வின்ட்சர் இவி மாடலுக்கு அமோகமான வரவேற்பு உள்ள நிலையில், டாடா மோட்டார்ஸூக்கு கடும் சவாலினை ஏற்படுத்துவதுடன் பலரும் விரும்பி வாங்கும் மாடலாக உள்ளது.