இந்தியாவில் 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு எப்பொழுது ?

maruti swift car 2024 model

இந்தியாவின் மிகுந்த 2024 ஆம் ஆண்டில் வரவுள்ள புதிய தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரினை மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஹேட்ச்பேக் ரக சந்தையில் முன்னணி மாடலாக ஸ்விஃப்ட் விளங்கி வருவது குறிப்பிடதக்கதாகும்.

ஜப்பானிய சந்தையில் வெளியிடப்பட்ட சுசூகி ஸ்விஃப்ட் அடிப்படையில் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்றதாக மாருதி ஸ்விஃப்ட் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பெற்றதாக அமைந்திருக்கும்.  சர்வதேச அளவில் கிடைக்கின்ற ஸ்விஃப்ட்டில் உள்ள மூன்று சிலிண்டர் Z12E 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்  5,700rpm சுழற்சியில் 82hp  மற்றும் 4,500rpm சுழற்சியில் 108Nm டார்க் வழங்குகின்றது. மைல்டு ஹைபிரிட் பெற  DC சிங்கோரேனஸ் மோட்டாரிலிருந்து 3.1hp மற்றும் 60Nm டார்க் வழங்குகின்றது.  சர்வதேச சந்தையில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி என இரு விதமான ஆப்ஷனை பெற உள்ளது.

WLTP முறை மைலேஜ் ஹைபிரிட் அல்லாத வேரியண்ட்  23.4kpl மற்றும் ஹைபிரிட் வேரியண்ட் 24.5kpl ஆக சான்றியளிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தைக்கு என அறிமுகம் செய்யப்பபடும் பொழுது  சிவிடி கியர்பாக்ஸ் மாடலுக்கு பதிலாக ஏஜிஎஸ் எனப்படும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

இன்டிரியரில்  9 இன்ச் தொடுதிரை ஃப்ரீஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் முறையில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை பெறுவதுடன் சுசூகி கனெக்ட் ஆதரவினை கொண்டிருக்கலாம்.

பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், இபிடி , ஏபிஎஸ் ஆகியவற்றுடன் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மற்றும் குரல் கட்டுப்பாடு ஆகியவை கொண்டிருக்கின்றது.

இந்திய சந்தைக்கு புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.