இந்தியாவின் மிகப் பிரபலமான ஆஃப் ரோடு எஸ்யூவி ஆக விளங்கும் மஹிந்திரா தார் (Mahindra Thar), 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக ஒரு பெரிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.16.99 லட்சம் வரையில் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3 டோர் பெற்ற 2025 தார் மாடல், விலை, பாதுகாப்பு, தொழில்நுட்பம் எனப் பல துறைகளிலும் மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக உள்ளது. குறிப்பாக இதன் பல்வேறு வசதிகளை 5 கதவுகளை பெற்ற தார் ராக்ஸில் இருந்து பெற்றுள்ளது.
2025 Mahindra Thar ்Faceliftயின் முக்கிய மாற்றங்கள்
முகப்பில் கிரில் மற்றும் பம்பர் காரின் முகப்புக்கு மெருகூட்டும் வகையில் மேம்படுத்தப்பட்டு காரின் நிறத்துக்கு ஏற்றதாக கொண்டு 7 ஸ்லாட்டுகளை பெற்ற கிரில் மற்றும் இரு வண்ண கலவை பம்பரை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
இது தார் எஸ்யூவிக்கு பிரீமியம் தோற்றத்தைக் கொடுக்க புதிய 18-இஞ்ச் அலாய் வீல் மற்றும் ஆஃப்-ரோடு சாகசத்துக்கு ஏற்ற 255-செக்ஷன் A/T டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
புதிதாக இந்த காருக்கு டேங்கோ ரெட் மற்றும் பேட்டில்ஷீப் கிரே என இரு நிறங்கள் சேர்க்கப்பட்டு பின்பக்கத்தில் ரியர் வைப்பருடன் வாஷர் மற்றும் ஸ்பேர் வீல் கவர் பகுதியில் 360 டிகிராக்கான கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இன்டீரியரில் முக்கிய மாற்றங்களை பெற்ற தார் 2025 மாடல்
உட்புறத்தில் தார் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு புதிய கருப்பு நிற டாஷ்போர்டு தீம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஸ்டீயரிங் வீல் ஆனது சமீபத்திய மஹிந்திராவின் தார் ராக்ஸ் மற்றும் ஸ்கார்பியோ-என் மாடல்களில் உள்ளதைப் பெறுகிறது. இது ஓட்டுநருக்கு மேம்பட்ட டிரைவிங் மற்றும் பல்வேறு சுவிட்ச் கட்டுப்பாடுகளையும் வழங்குகிறது.
10.25-இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை 5 டோர் மாடலில் இருந்து பெற்று வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் மற்றும் பிரத்யேக Adventure Stats மென்பொருளுடன் வருகிறது.
கூடுதலாக டெட் பெடல் (Dead Pedal) ஆனது ஆட்டோமெட்டிக் (AT) வேரியண்ட்களில், ஓட்டுநருக்கு இடது காலுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் தரப்பட்டுள்ளது.
Thar Facelift என்ஜின் ஆப்ஷன்
என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 152hp பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல், 119hp பவரினை வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டீசல் மற்றும் இறுதியாக, 132hp பவர் பெற்ற 2.2 லிட்டர் டீசல் என மூன்று விதமாக பெற்று மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்கள் தொடர்கின்றன.
முன்பு போலவே, 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோலில் மட்டும் 4WD ஒரு விருப்பமாக வழங்கப்படுகின்ற நிலையில், அதே நேரத்தில் 2.2 லிட்டர் டீசலுக்கு நிரந்தர வசதியாக உள்ளது.
2.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.5L டீசல் என்ஜின் பெற்றுள்ள RWD மாடல், குறைந்த விலையில் தார் எஸ்யூவியை வாங்க விரும்புவோருக்கும், நகரங்களுக்கு இடையிலான பயன்பாட்டிற்கு மட்டும் அதிகம் பயன்படுத்துவோருக்கும் ஒரு சிறந்த தேர்வாக அமையும். அதே சமயம், தீவிரமான ஆஃப்-ரோடிங் (Off-roading) அனுபவத்திற்கு 4WD இன்ஜின் விருப்பங்கள் உள்ளன.
2025 Mahindra Thar Variant wise (Ex-showroom)
Variants | D117 CRDe Diesel | 2.2L mHawk Diesel | 2.0 mStallion Petrol |
---|---|---|---|
AXT RWD MT | ₹9.99 lakh | — | — |
LXT RWD MT | ₹12.19 lakh | — | — |
LXT RWD AT | — | — | ₹13.99 lakh |
LXT 4WD MT | — | ₹15.49 lakh | ₹14.69 lakh |
LXT 4WD AT | — | ₹16.99 lakh | ₹16.25 lakh |
தாரின் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் தொடர்ந்து டூயல் ஏர்பேக், ABS மற்றும் ESP (Roll-over Mitigation) ஆகியவற்றுடன் ஹீல் ஹோல்டு மற்றும் டிசென்ட் கண்ட்ரோல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பாக குழந்தைகளுக்கான ISOFIX மவுண்ட் இருக்கை, ரோல் கேஜ் ஆகியவை தரநிலையாக உள்ளன. ஆனால் மற்ற மாடல்களை போல 6 ஏர்பேக்குகள் இல்லை.