Automobile Tamilan

530கிமீ ரேஞ்சு.., BYD ‘eMax 7’ எலெக்ட்ரிக் எம்பிவி விற்பனைக்கு வெளியனது

byd emax7 launched in india

6 மற்றும் 7 இருக்கைகளை கொண்டுள்ள பிஓய்டி நிறுவனத்தின் eMax 7 எலெக்ட்ரிக் எம்பிவி மாடலில் 55.4kwh மற்றும் 71.8Kwh என இருவிதமான பிளேட் பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது. இதில் குறைந்த 55.4kwh பேட்டரி மாடல் ரேஞ்ச் 430 கிமீ மற்றும் டாப் சுப்பீரியர் வேரியண்டில் 71.8Kwh பேட்டரி ரேஞ்ச் 530 கிமீ பெற்று ADAS பாதுகாப்பு தொகுப்பினை கொண்டுள்ளது.

BYD eMax7 Price list

(ex-showroom)

பொதுவாக இரு மாடல்களும் மணிக்கு 180 கிமீ வேகம் மற்றும் 310 NM டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 120KW பவரை பிரீமியம் வேரியண்டும் மற்றும் 150KW பவரை சுப்பீரியர் மாடலும் வெளிப்படுத்துகின்றது.

எல்இடி ஹெட்லேம்ப் பெற்றுள்ள மாடலில் மிகவும் நேர்த்தியாக டாப் வேரியண்டில் பனரோமிக் சன்ரூஃப் பெற்றும் குவார்ட்ஸ் ப்ளூ, ஹார்பர் கிரே, கிரிஸ்டல் ஒயிட் மற்றும் காஸ்மோஸ் பிளாக் ஆகிய நான்கு நிறங்களை பெற்று இன்டீரியரில் 2+2+2 மற்றும் 2+2+3 என 7 இருக்ககளை பெற்று 225/55 R17 டயர்களில் 17-இன்ச் அலாய் உள்ளது.

12.8-இன்ச் மிதக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆறு ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகளை இரு வேரியண்டிலும் டாப் மாடலில் வெவல் 2 ADAS பாதுபாப்பு தொகுப்பும் கொண்டுள்ளது.

பிஓய்டி நிறுவனம் இமேக்ஸ் 7 மாடலின் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,60,000 கிமீ, மோட்டார் மற்றும் மோட்டார் கண்ட்ரோலருக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,50,000 கிமீ வழங்குகின்றது.

Exit mobile version