சிட்ரோயன் இந்தியாவின் 2.0 திட்டத்தின் C3 காரை தொடர்ந்து இரண்டாவது மாடலாக பாசால்ட் X கூபே ஸ்டைல் காரில் கூடுதல் வசதிகள் பெற்றதாக விற்பனைக்கு ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.60 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை உள்ளது. குறிப்பாக பாசால்ட் எக்ஸ் அறிமுக சலுகை விலை ரூ.12.89 லட்சத்தில் துவங்குகின்றது.
ஆப்ஷனலாக டூயல் டோன் நிறங்கள் ரூ.21,000 வசூலிக்கப்படும் நிலையில், ஹாலோ 360 டிகிரி கேமரா ரூ.25,000 ஆக வசூலிக்கப்படுகின்றது.
குறிப்பாக நவீன தலைமுறையினர் விரும்பும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகள் என முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, டீலர் எண்ணிக்கை ஆகியவற்றை சிட்ரோயன் 2.0 திட்டத்தின் செயல்படுத்தி வருகின்றது. சில வாரங்களுக்கு முன்பாக C3 X அறிமுகம் செய்யப்பட்டது.
Basalt X வசதிகள் மற்றும் என்ஜின் விபரம்
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில், 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
டிரைவருக்கு ஏற்ற பல்வேறு சேவைகளை உடன் பயணிப்பவரை போல வழங்கும் CARA அசிஸ்டன்ஸ் என்ற வசதி சிட்ரோயன் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வசதி மூலம் AI சார்ந்தவற்றின் உதவியுடன் அழைப்புகள் மற்றும் அவசர கால உதவி, ஸ்மார்ட் ரிமைண்டர்ஸ், காலநிலை அறிக்கை, மேப்ஸ், நேவிகேஷன், வாகனங்களுக்கு நிகழ் நேர சப்போர்ட் என பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.
மேலும் CARA அசிஸ்டன்ஸூக்கு விருப்பமான பெயரை வாடிக்கையாளரே வைத்துக் கொள்ளலாம்.
பாசால்ட் எக்ஸின் இன்டீரியர் மற்ற மாடலை விட மாறுபட்ட வகையில் பிரவுன் மற்றும் கருப்பு நிற கலவையுடன் நடுத்தர வேரியண்டில் கருமை நிறத்தை பெற்றுள்ளது. 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் 40க்கும் மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களையும் பெறுகின்றது. 7.0 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர் கொண்டுள்ளது.
க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் ஸ்பீடு லிமிடெட்டர், வென்டிலேட்டேட் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் , ஏபிஎஸ் உடன் இபிடி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள், TPMS, ஹாலோ 360-டிகிரி கேமரா, எஞ்சின் இம்மொபைலைசர், வேக உணர்ந்து செயல்படும் ஆட்டோ டோர் லாக்குகள், அதிவேக எச்சரிக்கை அமைப்பு & பெரிமெட்ரிக் அலாரம் போன்றவை பெற்றுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ்