Automobile Tamil

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி அறிமுகமானது

honda elevate suv global debut

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், தனது முதல் காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக எலிவேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  முன்பதிவு ஜூலை மாதம் துவங்கப்பட்டு விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் வெளியாகும். எலிவேட் எலக்ட்ரிக் எஸ்யூவி 2026 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரக்கூடும்.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் வரவிருக்கும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகியவற்றை எலிவேட் எஸ்யூவி எதிர்கொள்ள உள்ளது.

Honda Elevate SUV

எலிவேட் எஸ்யூவி காரில் 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர், NA பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 119 bhp மற்றும் 145Nm டார்க் உற்பத்தி செய்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

எலிவேட் எஸ்யூவி காரின் பரிமாணங்கள் 4,312mm நீளம், 1,650mm உயரம் மற்றும் 2,650mm வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த மாடலில் 458 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் உள்ளது. எலிவேட் காரில் 220mm கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, எலிவேட் காரின் தோற்றம் கம்பீரத்தை வெளிப்படுத்தும் வகையில் அகலமான பெரிய கிரில் உள்ளது. எல்இடி ஹெட்லைட் மற்றும் அதன் கீழே மூடுபனி விளக்குகளால் சூழப்பட்டுள்ளது.

எலிவேட் காரின் ஸ்டைலிங் குறிப்புகளை புதிய HR-V மாடலில் உள்ளதை போல பகிர்ந்து கொள்கிறது. பக்கவாட்டில், ஹோண்டாவின் புதிய நடுத்தர அளவிலான காரில் தடிமனான சி-பில்லரை நோக்கி மேல்நோக்கி உள்ளது. இந்த காரில் 16 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

டாஷ்போர்டின் நடுவில் ஃபீரி ஸ்டான்டிங் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை சிஸ்டத்துடன் பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது. எலிவேட் ஒற்றை-பேன் சன்ரூஃப் மட்டுமே பெறுகிறது.

ஹோண்டா எலிவேட் காரில் சென்சிங் ADAS தொகுப்பின் மூலம் மோதுவதனை தடுக்கும் பிரேக்கிங் சிஸ்டம், லேன் மாறுபாடு எச்சரிக்கை, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், சாலை டிப்ரெச்சேர் எச்சரிக்கை மற்றும் ஆட்டோமேட்டிக் ஹை பீம் அசிஸ்ட் போன்ற அம்சங்களுடன் வரவுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹோண்டா எலிவேட் எஸ்யூவி விலை ரூ.10 லட்சத்தில் துவங்கலாம்.

Exit mobile version