Automobile Tamilan

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

2026 hyundai venue suv spied fr

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ள வெனியூ எஸ்யூவி மாடலின் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தலைமுறை மாடலின் உற்பத்தி நிலை படங்கள் தென்கொரியாவிலிருந்து கசிந்துள்ளது.

ஏற்கனவே, சில வாரங்களுக்கு முன்பாக உற்பத்தி நிலையில் உள்ள வெனியூவின் முன்பக்க கிரில் அமைப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது முழுமையான விபரங்கள் கசிந்துள்ளது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், XUV 3XO மஹிந்திரா, ஸ்கோடா கைலாக், மற்றும் கியா சொனெட் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் போட்டியாக உள்ளது. என்ஜின் ஆப்ஷனில் தற்பொழுதுள்ள மூன்றும் தொடர உள்ளதால், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று ஆப்ஷன்களை கொண்டிருப்பதுடன் மேனுவல், ஏஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் பெற்றிருக்கும், கூடுதலாக இந்த முறை சிஎன்ஜி ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தோற்ற அமைப்பில் க்ரெட்டா, டூஸான் உள்ளிட்ட மாடல்களின் தோற்றத்தை தழுவியதாக அமைந்த கிரில் அமைபு, செங்குத்தான முறையில் அடுக்கப்பட்ட ஹெட்லைட், கனெக்டேட் ரன்னிங் விளக்குகள் என நேர்த்தியாக அமைந்துள்ள இந்த வெனியூ காரில் பக்கவாட்டில் புதிய டிசைனை பெற்ற 16 அங்குல அலாய் வீல், சற்று உயரமாக அமைந்துள்ள வீல் ஆர்ச், சி பில்லர் பகுதியிலும் சில்வர் கார்னிஷ் பெற்று அதன் மேல் வெனியூ பிராண்டிங் உள்ளது.

பின்புறத்தில் உள்ள பம்பரில் டூயல் டோன் கிளாடிங்கினை பெற்று மிக அகலமான கனெக்டேட் எல்இடிலைட் உடன் கூடிய டெயில் விளக்குகளை பெற்றதாக அமைந்துள்ளது.

இன்டீரியரில் க்ரெட்டா எஸ்யூவி போல இந்த காரிலும் ட்வீன் ஸ்கீரின் செட்டப் பெற்ற அமைப்புடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன், மிக சிறப்பான இடவசதி கொண்டதாக விளங்க உள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு அதன் தொடர்ச்சியாக வெனியூ கிடைக்க உள்ளது.

image source – Instagram / @casper_i.vory

Exit mobile version