Automobile Tamilan

ஹூண்டாய் 2024 அல்கசாரின் உற்பத்தியை துவங்கியதா..!

சமீபத்தில் முழுமையாக உற்பத்தியை எட்டிய ஹூண்டாய் அல்கசார் 2024 மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் படங்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக புதிய சிவப்பு நிறத்தை பெற்றதாக வரவுள்ள மாடல் கிரெட்டா எஸ்யூவி தோற்றத்தில் இருந்து மாறுபட்ட முன்பக்க டிசைன் மற்றும் ஹெட்லைட் பெறுகின்றது.

6 மற்றும் 7 இருக்கை பெற்றுள்ள அல்கசாரில் உள்ள இன்டிரியர்  கிரெட்டாவை போலவே இரட்டை ஸ்கீரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றிருக்கும்.  மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை பெறுகின்றது.

hyundai alcazar

புதிய மாடல் அடிப்படையாகவே அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகளை பெற்று ஹில் ஹோல்டு, இஎஸ்பி உள்ளிட்ட அம்சங்களுடன் டாப் வேரியண்டுகளில் Level 2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற வாய்ப்புள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹூண்டாய் அல்கசார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ.17 லட்சத்தில் துவங்கலாம். எனவே, இருப்பில் உள்ள 2023 அல்கசாரை விற்பனையை அதிகரிக்க அதிகபட்சமாக ரூ.85,000 வரை விலை தள்ளுபடியை ஜூலை 2024 மாதத்துக்கு ஹூண்டாய் அறிவித்துள்ளது.

இதுதவிர, இந்நிறுவனத்தின் டூஸான் MY23 மாடலுக்கு ரூ.2,00,000 சலுகை, MY24 மாடலுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி, இதுதவிர எக்ஸ்டர் காருக்கு ரூ.10,000, வெனியூ, ஆரா மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.55,000 வரை தள்ளுபடி கிடைக்கின்றது.

image source – youtube/ israilmalik piyala

Exit mobile version