இந்தியாவின் மிக விலை குறைவான வேன் மாடலாக விளங்குகின்ற 2022 மாருதி சுசூகி ஈக்கோ காரில் பல்வேறு மேம்பாடுகளுடன் 5 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட மாடலாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
மாருதி சுசுகி தனது புதிய ஈக்கோ காரில் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் கொண்ட புதிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த எஞ்சினை பொருத்தியுள்ளது. பழைய G12B பெட்ரோல் எஞ்சினுக்குப் பதிலாக புதிய K சீரிஸ் 1.2 லிட்டர் எஞ்சினை வழங்குவதுடன் கூடுதலாக புதிய Eeco உடன் CNG விருப்பம் உள்ளது.
2022 மாருதி ஈக்கோ காரில் 1.2 லிட்டர் மேம்பட்ட கே சீரிஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி எஞ்சின் ஆகும். இதன் பவர் 59.4 kW (80.76 PS) @ 6000 RPM மற்றும் 104.4 Nm @ 3000 RPM டார்க் வெளிப்படுத்துவதுடன் (பெட்ரோல் வகைகளுக்கு) 10% கூடுதல் சக்தியை வழங்குகிறது.
சிஎன்ஜி மாடல் பவர் 52.7 kW (71.65 PS) @ 6000 RPM மற்றும் 95 Nm @ 3000 RPM டார்க் வெளிப்படுத்துகின்றது.
புதிய ஈக்கோ பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக லிட்டருக்கு 20.20 கிமீ வரை வழங்குகிறது. அதே நேரத்தில் S-CNG மாடல் அதிகபட்சமாக கிலோவிற்கு 27.05 km வரை வழங்கும். பாதுகாப்பு அம்சங்களில் என்ஜின் இம்மொபைல்சர், அபாய சுவிட்ச், டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், ஸ்லைடிங் கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கான சைல்டு லாக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை பெற்றுள்ளது.
மேம்பட்ட பவர்டிரெய்ன் மைலேஜ் மற்றும் புதிய அம்சங்கள் கொண்ட பல்நோக்கு வேன் முழுமையாக உள்ளடக்கியது. புதிய ஈகோ புதிய மெட்டாலிக் ப்ரிஸ்க் ப்ளூ பாடி கலர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் ஏசி மற்றும் ஹீட்டருக்கான ரோட்டரி கட்டுப்பாடுகள் ஆகியவற்றைப் பெறுகிறது. புதிய ஈக்கோ கார்கோ பெட்ரோல் மாறுபாட்டில் உள்ள கேபின் மேம்பாடுகளுடன் 60 லிட்டர் வரை கொள்ளளவு கொண்டுள்ளது.
புதிய மாருதி சுஸுகி ஈகோ காரின் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு.