Automobile Tamilan

புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது

New Maruti Suzuki Swiftசமீபத்தில் நடைபெற்ற ஜப்பான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கான்செப்ட் அடிப்படையில் புதிய காரினை இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக காட்சிக்கு வந்த சுசூகி ஸ்விஃப்ட் மாடல் பல்வேறு ஸ்டைலிங் மேம்பாடுகளை உற்பத்தி நிலை காரும் கொண்டதாக அமைந்திருக்கலாம்.

2024 Maruti Swift Spied

புதிதாக வரவுள்ள சுசூகி ஸ்விஃப்ட் காரில் விற்பனையில் உள்ள 1.2 லிட்டர் கே சீரிஸ் என்ஜினுக்கு பதிலாக புதிய Z சீரிஸ் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் என்ஜின் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மிக வலுவான 48V ஹைபிரிட் அம்சத்தை பெற உள்ளதால் அதிகபட்சமாக மைலேஜ் 40 Kmpl வரை வெளிப்படுத்தலாம் என கூறப்படுகின்றது.

சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற ஸ்விஃப்ட் கார் முழுமையாக மறைக்கப்பட்டு சோதனை செய்யப்படும் நிலையில், கான்செப்ட்டுக்கு இணையாகவே தோற்றம் உள்ளது. புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பம்பருடன் அமைந்திருப்பதுடன், பக்கவாட்டில் உள்ள பின்புற கதவுகளுக்கு கைப்பிடி வழகம்மான இடத்தில் உள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் பெற்றதாக அமைந்துள்ளது.

இன்டிரியரில் ஃபீரி ஸ்டான்டிங் வகையில் உள்ள புதிய 9.0-இன்ச் தொடுதிரை அமைப்பு கான்செப்ட்டில் உள்ளதை போன்றே அமைந்துள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட வசதிகளை பெறுவதுடன் காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய அனைத்தும் பெறலாம் மேலும், மாருதி சுசூகி 6 ஏர்பேக்குகளை வழங்குவதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கலாம்.

ஆனால், ஸ்விஃப்ட் கான்செப்ட்டில் இடம்பெற்றிருந்த ADAS, 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளை பெற வாய்ப்பில்லை.

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் கிடைக்கும்.

image source and spy images

Exit mobile version