இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் வெளியாகிறது புதிய மாருதி சுசூகி வேகன்ஆர்

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் இந்தியாவில் முன்னணி ஆட்டோமோபைல் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு முதற்பகுதியில் தனது புதிய தயாரிப்பான மாருதி சுசூகி வேகன்ஆர் கார்களை இன்டிஹ்யாவில் அறிமுகம் செய்ய ட்உள்ளது.

இந்த காருக்கான டெஸ்ட்டிங் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஜெனரேசன் வேகன்ஆர் கார்கள் பல்வேறு புதிய வசதிகளுடன், ஸ்போர்ட்ஸ் டிசைனில் இருப்பது இந்த கார் சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த புதிய மாருதி சுசூகி வேகன்ஆர் கார்கள் ஏற்கனவே ஜப்பான் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்து விட்டது. இந்தியா ஸ்பெக் கார்கள், ஜப்பானிய கார்களில் இன்று மாறுபட்டே இருக்கும். இந்த கார்களில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த கார்கள் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் மற்றும் AMT ஆப்சன்களுடன் வெளியாகும். இதுமட்டுமின்றி இந்தோ-ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனம், வரும் 2020 ஆண்டில் முழுவதும் எலக்ட்ரிக் வெர்சன் வேகன்ஆர் காரை அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. புதிய மாருதி சுசூகி வேகன்ஆர் கார்கள் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்படுவதால், இந்த காரின் விலையும் குறைவாகவே இருக்கும்./

மாருதி சுசூகி வேகன்ஆர் கார்கள் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும், ரெனால்ட் குவிட், ஹுண்டாய் சாண்ட்ரோ, டாட்டா டியோகோ மற்றும் பிற கார்களுக்கு போட்டியாக இருக்கும். மாருதி சுசூகி இந்தியா, ஒவ்வொரு மாதத்திற்கும் 18,000 வேகன்ஆர் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.