Automobile Tamilan

டாடா மோட்டார்சின் கர்வ் டார்க் எடிசன் படங்கள் வெளியானது

new tata curvv dark edition

அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள டாடா மோட்டார்சின் கர்வ் கூபே ஸ்டைல் எஸ்யூவி மாடலின் அடிப்படையிலான டார்க் எடிசன் எற்கனவே இந்நிறுவனத்தின் மற்ற பிளாக் எடிசன் போல கருமை நிறத்தை கொண்டுள்ளது.

டாப் Accomplished வேரியண்டில் இருக்கின்ற வசதிகளுடன் வரவுள்ள கர்வ் எடிசன் ஆனது சமீபத்தில வந்துள்ள சிட்ரோன் பாசால்ட் கூபே டார்க் எடிசனை எதிர்கொள்ளுகின்றது. ஆனால் எலக்ட்ரிக் கர்வ் மாடலில் ரெட் டார்க் எடிசன் அறிமுகம் குறித்தான தகவல் இல்லை.

முழுமையான கார்பன் கருப்பு நிறத்தை பெற்ற எக்ஸ்டீரியர் டைமண்ட் கட் அலாய் வீல் பெற்றிருப்பதுடன் கருமை நிறத்துடன் கூடிய டேஸ்போர்டில் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 9 ஆடியோ ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் #DARK பேட்ஜிங் இருக்கையில் பெற்று பனரோமிக் சன்ரூஃப் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்பி 20க்கு மேற்பட்ட வசதிகளை பெற்ற ADAS ஆகியவற்றை கொண்டிருக்கும் என அறிந்து கொண்டுள்ளோம்.

மேலும் இந்த மாடலில் வழக்கமான காரில் உள்ள அதே மெக்கானிக்கல் அம்சங்களை கொண்டிருக்கும். எனவே, 125hp, 225Nm டார்க் வெளிப்படுத்தும் பெட்ரோல்  மற்றும் 118hp, 260Nm டார்க் வெளிப்படுத்தும் டீசல் எஞ்சின் ஆனது 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் இறுதி போட்டி அல்லது அதற்கு முன்பாக கர்வ் டார்க் விற்பனைக்கு வெளியாகலாம்.

Exit mobile version