Automobile Tamilan

புதிய டாடா நெக்ஸான் வேரியண்ட் வாரியான வசதிகள்

tata nexon new

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்ஸான் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டிலும் ஸ்மார்ட், ஸ்மார்ட்+, ஸ்மார்ட்+ (S), ப்யூர்+, ப்யூர்+ (S), க்ரீயேட்டிவ், க்ரீயேட்டிவ்+, க்ரீயேட்டிவ்+ (S), ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ் (S) மற்றும் ஃபியர்லெஸ்+ (S) ஆகிய வேரியண்டுகள் கிடைக்க உள்ளது.

+ என்பது கூடுதல் வசதிகள் கொண்ட மாடலாகவும், (S) என குறிப்பிட்டிருந்தால் சன்ரூஃப் பெற்றிருக்கும்.

120hp பவரையும், 170Nm டார்க் வழங்கும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு AMT மற்றும் 7- வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் (க்விக் ஷிஃப்டர்) என 4 கியர்பாக்ஸ்களில் கிடைக்கிறது.

அடுத்தப்படியாக, 115hp பவர் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆனது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் வழங்கப்பட்டுள்ளது.

Tata Nexon Smart

6 ஏர்பேக்குகள்

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்

எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லைட்

ரைடிங் மோடு- Eco, City & Sports

ஒளிரும் வகையிலான லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங்

ISOFIX

முன்பக்க பவர் விண்டோஸ்

ரிவர்ஸ் சென்சார்

சென்டரல் லாக்கிங்

5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (பெட்ரோல் மட்டும்)

Tata Nexon Smart+

ஸ்மார்ட் வசதிகளுடன் கூடுதலாக,

சன்ரூஃப் ஆனது ஸ்மார்ட்+ வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக சன்ரூஃப் வசதி Smart+ (S) வேரியண்டில் உள்ளது.

Tata Nexon Pure

ஸ்மார்ட்+ வசதிகளுடன் கூடுதலாக,

சன்ரூஃப் ஆனது ப்யூர் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக சன்ரூஃப் வசதி Pure (S) வேரியண்டில் உள்ளது.

Tata Nexon Creative

ப்யூர் வசதிகளுடன் கூடுதலாக

Tata Nexon Creative+

க்ரீயோட்டிவ் வசதிகளுடன் கூடுதலாக,

சன்ரூஃப் வசதி ஆனது க்ரீயோட்டிவ்+ வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக குரல் உதவியுடன் இயக்கும் சன்ரூஃப் வசதி Creative+ (S) வேரியண்டில் உள்ளது.

Tata Nexon Fearless

க்ரீயோட்டிவ்+ வசதிகளுடன் கூடுதலாக,

சன்ரூஃப் வசதி ஆனது ஃபியர்லெஸ்+ வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக குரல் உதவியுடன் இயக்கும் சன்ரூஃப் வசதி Fearless (S) வேரியண்டில் உள்ளது.

Tata Nexon Fearless+ (S)

புதிய டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் எஸ்யூவி விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சத்தில் அமையக்கூடும். வரும் செப்டம்பர் 4, 2023 முன்பதிவு துவங்கப்படும் நிலையில் விற்பனைக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

நெக்ஸானுக்கு போட்டியாக மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி 300, மாருதி ஃப்ரான்க்ஸ், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், ரெனால்ட் கிகர்,மற்றும் நிசான் மேக்னைட் போன்றவ்வை உள்ளன.

மேலும் வருகின்ற 9 ஆம் தேதி டாடா நெக்ஸான்.இவி எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் செய்ப்பட்ட உள்ளது.

Exit mobile version