Automobile Tamilan

2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது

8f583 2021 tata safari specs

நாளை டாடா மோட்டார்ஸ் வெளியிட உள்ள புத்தம் புதிய சஃபாரி எஸ்யூவி டீலர்களுக்கு வந்துள்ள நிலையில், முதன்முறையாக இன்டிரியர் உட்பட அனைத்து படங்களும் வெளியாகியுள்ளது.

முன்புற தோற்ற அமைப்பில் ஹாரியர் எஸ்யூவி காரை நினைவுப்படுத்துகின்ற புதிய சஃபாரி காரில் மிக நேர்த்தியான க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட டாடாவின் கிரில் அமைப்பு கவருகின்ற நிலையில் புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகள் அமைந்துள்ளன.

இம்பேக்ட் 2.0 வடிவ தாத்பரியத்தை பெற்றுள்ள சஃபாரியில் டி-பில்லர் டிசைன் அமைப்பு, டெயில் லைட் மற்றும் பின்புற வடிவமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்டிரியர் அமைப்பிலும் பெரிதாக வித்தியாசம் இல்லாமல் ஹாரியரை போலவே அமைந்திருந்தாலும், மிதக்கும் வகையிலான கனெக்டேட் நுட்பத்துடன் 8.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உட்பட கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் 6 மற்றும் 7 இருக்கைகளை கொண்டிருக்கும்.

2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி  பவர்மற்றும் 350 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும். இந்த காருக்கான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6 வேக மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும். 2 வீல் டிரைவ் மட்டுமே தற்போது பெற்றுள்ளது.

மேலதிக விபரம் மற்றும் விலை என அனைத்தும் நாளை வெளியிடப்பட உள்ளது.

image source

Exit mobile version