Automobile Tamilan

டொயோட்டா ருமியன் காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

toyota rumion mpv

எர்டிகா காரின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்டுள்ள டொயோட்டா ருமியன் காரில் 7 இருக்கைகளை பெற்றதாக பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் G, S மற்றும் V என மூன்று பிரிவில் 6 விதமான வேரியண்ட் கிடைக்க உள்ளது.

டொயோட்டா ருமியன் என்ஜின்

ருமியன் காரில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் டூயல் ஜெட் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் வருவதால், 6000rpm-ல் 103 hp பவரையும், 4400rpm-ல் 136.8 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு கூடுதலாக, பேடல் ஷிஃப்டர்டன் புதிய 6-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகவும் கிடைக்கின்றது.

எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் 20.51kpl மற்றும் ஆட்டோமேட்டிக் 20.30kpl மைலேஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது.

கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷன் பெறும் பொழுது ருமியன் CNG பயன்முறையில் இயங்கும் போது 87hp மற்றும் 121.5Nm டார்க் ஆகும். சிஎன்ஜி 5 ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே வருகிறது. கிலோவிற்கு 26.11 கிமீ மைலேஜ் என்று கூறப்படுகிறது.

அனைத்து வேரியண்டிலும் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக இரண்டு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ISOFIX குழந்தை இருக்கை அம்சம் (இரண்டாவது வரிசை) சீட் பெல்ட் ரிமைன்டர் (அனைத்து இருக்கைகளும்)
பின்புற பார்க்கிங் சென்சார் உள்ளது.

Toyota Rumion S

1.5 பெட்ரோல் MT/AT மற்றும் 1.5 CNG MT என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

Toyota Rumion G

1.5 லிட்டர் பெட்ரோல் MT மட்டும் பெறுகின்ற வேரியண்ட் ருமியன் S வசதிகளுடன்,

Toyota Rumion V

1.5 லிட்டர் பெட்ரோல் MT/AT பெறுகின்ற வேரியண்ட் ருமியன் G வசதிகளுடன்,

மாருதி எர்டிகா விலை ரூ. 8.64 லட்சம் முதல் 13.08 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் இதனை விட சற்று கூடுதாக டொயோட்டா ருமியன் விலை சற்று கூடுதலாக அமையலாம்.

Exit mobile version