Automobile Tamilan

புதிய 2026 செல்டோஸ் அறிமுக டீசரை வெளியிட்ட கியா

next gen kia seltos teased

வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள புதிய தலைமுறை கியா செல்டோஸ் நடுத்தர எஸ்யூவி சந்தையில் மீண்டும் போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் நவீன அம்சங்கள் மட்டுமல்லாமல் மிக முக்கியமாக ஹைபிரிட் சார்ந்த பவர்டிரெயின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

Kia Seltos Launch soon

செல்டோஸ் பார்ப்பதற்கு இப்போது இருப்பதை விட மிகவும் கம்பீரமாகவும், முரட்டுதனமான தோற்றத்தை வெளிப்படுத்த இந்நிறுவன பாரம்பரிய டைகர் நோஸ் கிரில் அமைப்புடன், செங்குத்தான ரன்னிங் எல்இடி விளக்கு கொடுக்கபட்டு நேர்த்தியான எல்இடி ஹெடைல்ட் உள்ளது. புதிய டிசைனில் பம்பர்கள் மற்றும் அலாய் வீல்களுடன் டெயில் லேம்ப் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.

சமீபத்திய டீசரில் மிக அகலமான பனரோமிக் சன்ரூஃப் உள்ளதை உறுதி செய்துள்ள நிலையில், இன்டீரியரில் சமீபத்திய சிரோஸ் போல மிக அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன், டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றிருக்கும்.

வழக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல், டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் இடம்பெற்றிருப்பதுடன் கூடுதலாக, கியா செல்டோஸில் ஹைப்ரிட் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதால் அதிக மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனில் வழக்கம் போல மேனுவல், iMT மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படும்.

புதிய 2026 கியா செல்டோஸ் விற்பனைக்கு வரும்போது, ஹூண்டாய் கிரெட்டா , டாடா சியரா, ஹோண்டா எலிவேட், மாருதி சுசூகி விக்டோரிஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் மற்றும் டாடா கர்வ் போன்ற கார்களுக்கு கடும் போட்டியாக அமையும்.

Exit mobile version