Automobile Tamilan

டிசையர் காருக்கு முன்பதிவை துவங்கிய மாருதி சுசூகி

dzire bookings open

மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற டிசையர் காரின் 2025 மாடல் நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் நாளை நவம்பர் 4 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ளது. முன்பே டீலர்களை வந்தடைய துவங்கியுள்ளதால் விலை அறிவிக்கப்பட்ட மறுநாளே டெலிவரி துவங்கப்பட உள்ளது.

டிசையருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்பட உள்ள நிலையில் டீலர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவினை மேற்கொள்ளலாம்.

சமீபத்தில் வெளியான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றிருக்கின்ற 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பவர் அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக  மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனில் பவர் 69bhp மற்றும் 102Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டு ஒரே நாளில் வெளியிடப்படுமா அல்லது சிஎன்ஜி மாடல் வருகையை சற்று தாமதப்படுத்த வாய்ப்புள்ளது.

குறிப்பாக , நான்காம் தலைமுறை புதிய டிசையர் காரின் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, அடிப்படையாக 6 ஏர்பேக்குகள் பெற்று மூன்று-புள்ளி இருக்கை பெல்ட், சீட் பெல்ட் ரிமைன்டர், ESP, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ABS உடன் EBD ஆகிய வசதிகளை கொண்டிருக்கும். புதிய மாடலின் விலை ரூ.7 லட்சம் முதல் துவங்க வாய்ப்புள்ளது.

Exit mobile version