Automobile Tamilan

நிசான் ஆரியா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியா வருகையா ?

nissan ariya suv

2024 ஆம் ஆண்டின் இறுதியில் நிசான் நிறுவனம் ஆரியா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் நிசான் எக்ஸ்-ட்ரையில் எஸ்யூவி மாடலை 2024 வருடத்தின் முதல் காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

ஆரியா எலக்ட்ரிக் மாடல் இந்தியாவில் கிடைக்கின்ற ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா EV6 என இரு மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

Nissan Ariya

இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆரியா எஸ்யூவி சர்வதேச அளவில் 402km ரேஞ்ச் வழங்குகின்ற 63kWh பேட்டரி பெற்ற மாடல் 217hp மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

87kWh என பேட்டரி ஆப்ஷனை பெற்ற மாடல் இரண்டு விதமான பவரை வழங்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 529 கிமீ ரேஞ்ச் மாடல் 242hp மற்றும் 300Nm வெளிப்படுத்துவடன் டாப் வேரியண்ட் 306hp பவர், 600Nm டார்க் வழங்கி 513Km ரேஞ்ச் வழங்குகின்றது.

மிக நேர்த்தியான டிசைன் வடிவமைப்பினை கொண்ட ஆரியா காரில் 19 அல்லது 20 அங்குல வீல் பெற்று ஒளிரும் வகையிலான லோகோ, கூபே வடிவத்தை பெறும் வகையிலான தோற்றத்தை இந்த எஸ்யூவி வெளிப்படுத்துகின்றது.

இன்டிரியரில் இரண்டு பிரிவுகளை பெற்ற 12.3-இன்ச் டிஸ்ப்ளே திரைகள், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் ADAS தொழில்நுட்பம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்தியாவில் நிசான் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காரை உள்நாட்டில் தயாரித்து 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. மேலும் இரண்டு புதிய எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக எக்ஸ்-ட்ரையில், இதுதவிர ஜூக் அல்லது காஷ்காய் எஸ்யூவி என இரண்டில் ஒன்றை வெளியிடலாம்.

நிசான் ஆரியா எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரக்கூடும் ஆனால் நிசான் இந்த மாடலின் வருகையை உறுதிப்படுத்தவில்லை.

Exit mobile version