Site icon Automobile Tamilan

இந்தியாவில் ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரெனால்ட் கேப்டூர் முன்பதிவு

டஸ்ட்டர் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 hp பவர் மற்றும் 142 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 5 வேக மேனுவல் தவிர சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம். மேலும்  1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 hp பவர் மற்றும் 245 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல் தவிர 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர ஆல்வீல் டிரைவ் வேரியன்ட் ஆப்ஷனலாக அறிமுகம் செய்யப்படலாம்.

பல்வேறு நவீன வசதிகளான ஸ்பார்க்கிள் எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள், 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் ஆகியவற்றுடன் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக இருக்கும்.

அக்டோபர் மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள கேப்சர் எஸ்யூவி மாடலுக்கு டீலர் வாயிலாக ரூ. 25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். கேப்டூர் எஸ்யூவி விலை ரூ.12 லட்சத்தில் தொடங்கி ரூ.17 லட்சத்திற்குள் அமையும் வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version