Automobile Tamilan

இந்தியா வரவிருக்கும் 7 இருக்கை ஹூண்டாய் கிரெட்டா ஸ்பை படம் வெளியானது

0cb04 hyundai creta 7 seater spied

5 இருக்கை பெற்ற ஹூண்டாய் கிரெட்டாவின் அடிப்படையில் 7 இருக்கை பெற்ற காரினை அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனையில் உள்ள கிரெட்டா எஸ்யூவி காரினை விட கூடுதலாக வீல்பேஸ் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 20 மிமீ வரை நீட்டிக்கப்பட்டு அனேகமாக 2,630 மிமீ வரை பெற்றிருக்கலாம். இப்போது விற்பனையில் உள்ள 5 இருக்கை கார் 2610 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. மேலும், காரின் நீளம் 30 மிமீ வரை மொத்தமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தோற்ற அமைப்பில் விற்பனையில் கிடைக்கின்ற கிரெட்டா காரை விட கூடுதலான ஸ்டைலிங் மற்றும் பிரீமியம் அம்சங்களை பெற்றதாக அமைய உள்ளது. இன்டிரியரில் கூடுதலான ஸ்டைலிங் அம்சங்கள் மற்றும் வசதிகளை பெற்றிருக்கும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள 7 இருக்கை பெற்ற டாடா கிராவிட்டாஸ், எம்ஜி ஹெக்டர் பிளஸ் போன்றவற்றை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டின் மத்தியில் அல்லது இறுதியில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

Image source: Palisade Owners Club Korea

Exit mobile version