Automobile Tamilan

ஆகஸ்ட் 21ல் ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி பெயர் வெளியாகும்

skoda compact suv

உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ள ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் குறைந்த விலை காம்பேக்ட ரக எஸ்யூவி மாடலின் பெயர் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிறுவனம் இந்த காருக்கான பெயரை சூட்டுவதற்காக போட்டியை அறிவித்திருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பராகுவே, செக் குடியரசு மற்றும் ஸ்கோடாவின் தலைமையகம் போன்ற நகரங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றது.

Skoda Compact SUV

MQB-A0-IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு வரவுள்ள நான்கு மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மாடலானது ஏற்கனவே சந்தையில் உள்ள மிகக் கடுமையான போட்டியாளரான டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வெனியூ, கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்ட பல்வேறு மாடல்களுக்கு கடுமையான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

115hp பவரை வழங்குகின்ற 1.0 லிட்டர் பெட்ரோல் டர்போ என்ஜின் 170 Nm டார்க் பெற வாய்ப்புள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெறலாம்.

Skoda Kwid, Skoda Kymaq, Skoda Kylaq, Skoda Kariq, Skoda Kyroq, Skoda Kosmiq, Skoda Kayaq, Skoda Kaiq, Skoda Kliq மற்றும் Skoda Karmiq இந்த 10 பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரை ஸ்கோடா நிறுவனம் இந்த காருக்கு அறிவிக்க உள்ளது.

Exit mobile version