₹ 12.39 லட்சத்தில் ஸ்கோடா குஷாக் Onyx எடிசன் விற்பனைக்கு வந்தது

Skoda Kushaq Slavia 1.5 Ambition

ஸ்கோடா நிறுவனம் குஷாக் எஸ்யூவி காரில் சிறப்பு Onyx எடிசன் மாடலை ₹ 12.29 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. விற்பனையில் உள்ள ஏக்டிவ் வேரியண்டின் அடிப்படையில் கூடுதல் வசதிகளை பெற்று ரூபாய் 80,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

115hp, 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறப்பு எடிசனில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

ஸ்கோடா குஷாக் Onyx எடிசன்

ஸ்கோடா குஷாக் ஓனிக்ஸ் எடிசனில் வெளிப்புறத்தில் முக்கிய மாற்றமாக கதவுகளில் சாம்பல் நிற கிராபிக்ஸ், மேலும் இதன் பி-பில்லரில் ‘ஓனிக்ஸ்’ பேட்ஜிங் பெறுகிறது. சிறப்பு பதிப்பில் முன்பக்க பம்பரில் ஃபாக்ஸ் டிஃப்பியூசர், முன்பக்க கிரில்லில் குரோம் பூச்சூ மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பெற்ற 16 இன்ச் ஸ்டீல் வீல் ஆகியவையும் உள்ளன.

உட்புறத்தில் சிறிய மாற்றங்களை பெற்றுள்ள இந்த எடிசன் ஸ்கஃப் பிளேட்டுகள் மற்றும் ஹெட்ரெஸ்ட்களில் ஓனிக்ஸ் பேட்ஜிங், கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான இன்டிரியர் தீம், டூ-ஸ்போக் ஸ்டீயரிங், ஏசி வென்ட்களில் குரோம் சுற்றுகள் மற்றும் டேஷ்போர்டில் டெக்ஸ்சர்டு பேட்டர்ன் ஆகியவற்றை கொண்டுள்ளது.

குஷாக் ஓனிக்ஸ் வேரியண்டில் இரண்டு முன் ஏர்பேக்குகள், ESP, அனைத்து பயணிகளுக்கும் மூன்று-புள்ளி இருக்கை பெல்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ISOFIX இருக்கைகள் ஆகியவற்றைப் பெறுகிறது.

Variants 

Ex-showroom Prices

Active 

Rs 11.59 lakh

Onyx Edition (New)

Rs 12.39 lakh

Ambition Classic 

Rs 12.99 lakh

ஸ்கோடா குஷாக் காரில் அடுத்து ஆம்பியஷன் வேரியண்டில் கூடுதலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் வழங்கும் என்ஜின் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களில் குஷாக் மற்றும் ஸ்லாவியா என இரண்டு கார்களிலும் ஆம்பியஷன் வேரியண்டில்  கிடைக்கும்.

Variant Price
Kushaq 1.5 TSI Ambition MT Rs. 14.99 Lakhs
Kushaq 1.5 TSI Ambition AT Rs. 16.79 Lakhs
Kushaq 1.5 TSI Ambition AT (Dual Tone) Rs. 16.84 Lakhs

ஸ்கோடா ஸ்லாவியா 1.5L Ambition விலை

Skoda Slavia 1.5 Ambition Prices:
Slavia 1.5 TSI Ambition MT Rs. 14.94 Lakhs
Slavia 1.5 TSI Ambition AT Rs. 16.24 Lakhs
Slavia 1.5 TSI Ambition AT (Dual Tone) Rs. 16.29 Lakhs
Exit mobile version