Automobile Tamilan

ஸ்கோடாவின் கைலாக் மைலேஜ் மற்றும் டெலிவரி விபரம் வெளியானது.!

Skoda Kylaq suv mileage

ஸ்கோடா இந்தியாவின் புதிய கைலாக் காரின் மைலேஜ் விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியாளர்களுடன் இந்த மைலேஜ் எவ்வாறு ஒப்பீடு செய்யப்படுகின்றது மேலும் டெலிவரி சார்ந்த அம்சங்களை தற்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

இந்நிறுவனத்தின் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மிகவும் விலை குறைவான மாடலாக அறியப்படுகின்ற கைலாக் ஆனது ஒற்றை 115Ps , 178Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை பெறுகின்ற, இந்த மாடலின் மைலேஜ் விபரங்கள் தற்பொழுது ARAI சோதனையின் படி,

கைலாக் 6 வேக மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 19.05Km மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 19.68 கிமீ என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.

போட்டியாளர்களில் உள்ள டர்போ அல்லது அதற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் மட்டும் ஒப்பீடுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாடல் மேனுவல் ஆட்டோமேட்டிக்
ஸ்கோடா கைலாக் 19.08 kmpl 19.68 kmpl
மாருதி பிரெஸ்ஸா 17.38 kmpl 19.8 kmpl
டாடா நெக்ஸான் 17.44 kmpl 17.01 kmpl
மஹிந்திரா XUV3XO 20.1 kmpl (turbo) 18.2 kmpl
ஹூண்டா வெனியூ 18.25 kmpl 18.15 kmpl
கியா சொனெட் 18.7 kmpl 19.2 kmpl
கியா சிரோஸ் 18.2 kmpl 17.68 kmpl
நிசான் மேக்னைட் 20 kmpl 17.7 kmpl
ரெனால்ட் கிகர் 20 kmpl 17.7 kmpl
டைசோர்/ஃபிரான்க்ஸ் 21.7 kmpl 22.8 kmpl

டெலிவரி தேதி குறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமா அறிவித்துள்ள ஸ்கோடா நிறுவனம் ஜனவரி 27, 2025 முதல் டெலிவரி துவங்கும் என முதல் முறையாக முன் பதிவு செய்த பத்தாயிரம் வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும் டெலிவரி வழங்க உள்ளது. ஆனால் தற்பொழுது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி கால அளவு 3 முதல் 5 மாதங்கள் வரை உள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து தெளிவான விளக்கங்கள் எதுவும் இந்நிறுவனத்தால் தற்போது வழங்கப்படவில்லை. ஆனால் தற்பொழுது முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த டீலர்களின் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் 5 மாதம் வரை காத்திருப்பு காலம் உள்ளதாக கூறப்படுகின்றது

Exit mobile version