Automobile Tamilan

ஸ்கோடா ஸ்லாவியா மான்டே கார்லோ எடிசன் அறிமுகமானது

skoda slavia sportline

ஸ்கோடா இந்தியா நிறுவனம் புதிய ஸ்லாவியா செடான் அடிப்படையில் மான்டே கார்லோ எடிசனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் மொனாக்கோவின் மான்டே கார்லோ நகரில் நடைபெற்ற ரேலியில் 1936 ஆம் ஆண்டு வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு எடிசனை அறிமுகம் செய்து வருகின்றது.

ஸ்லாவியா காரில் கருப்பு நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்புற கிரில், இரு பக்க பம்பரிலும் கருமை நிற கார்னிஷ் பெற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது பக்கவாட்டில் 16 அங்குல கருப்பு நிற அலாய் வீல் மேற்கூரையில் கருப்பு நிறத்துடன் கூடிய எலக்ட்ரிக் சன் ரூஃப், பக்கவாட்டில் மான்டே கார்லோ பேட்ஜிங் பின்புறத்தில் கருமை நிற எல்இடி டெயில் லைட் உள்ளது.

இன்டீரியரிலும் பல்வேறு இடங்களில் கருமை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஸ்கஃப் பிளேட் இருக்கைகளில் பேட்ஜிங் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது சிவப்பு நிற தையல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மான்டே கார்லோ போல அமைந்திருந்தாலும் ஸ்லாவியா போர்ட் லைன் வேரியண்டில் சிக்னேச்சர் காரில் உள்ளதை போன்ற இன்டிரியர் பெற்று அலுமினியம் பெடல்கள், கிரே ஃபேப்ரிக் அப்ஹோலஸ்ட்ரி, சந்துருப் போன்றவை எல்லாம் பெற்று இருக்கின்றது.

1.5 லிட்டர் TSI நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 147.5 bhp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்குகின்றது. இந்த காரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது.

1.0 லிட்டர் 114bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

(All Price Ex-showroom)

Exit mobile version