Automobile Tamilan

டாடா அல்ட்ரோஸ் DCA ஆட்டோமேட்டிக் காருக்கு முன்பதிவு துவங்கியது

57ffa tata altroz automatic bookings

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் DCA எனப்படுகின்ற டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் விற்பனைக்கு கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அதனால் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

டாடாவின் Altroz DCA (Dual Clutch Automatic) என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது டூயல் கிளட்ச் தொழில்நுட்பத்துடன் இரட்டை கிளட்ச் கியர்பாக்ஸைப் பயன்படுத்தும். கூடுதலாக, அல்ட்ரோஸ் DCA ஆனது XT, XZ மற்றும் XZ+ வகைகளில் தனியான டார்க் எடிஷன் வரிசையுடன் விற்பனை செய்யப்படும் என்பதையும் டாடா உறுதிப்படுத்தியுள்ளது. புதிய நீள நிறத்துடன், சிவப்பு, சாம்பல், வெள்ளை மற்றும் மற்றொரு நீல நிறத்தில் கிடைக்கும். அல்ட்ரோஸ் DCA ஆனது 86hp, 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே வரும். மேலும் சக்திவாய்ந்த 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் விருப்பத்துடன் வர வாய்ப்பில்லை.

அல்ட்ராஸ் காரில் லெதேரேட் இருக்கைகள், ஹர்மனின் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற ஏசி வென்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், iRA கணெக்டேட் கார் தொழில்நுட்பம் போன்ற பல பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது. மேலும், ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்ற போட்டியாளர்களான மாருதி சுஸுகி பலேனோ AMT, ஹூண்டாய் i20 1.0 DCT, ஃபோக்ஸ்வேகன் போலோ 1.0 TSI தானியங்கி மற்றும் ஹோண்டா ஜாஸ் CVT ஆகியவற்றை எதிர் கொள்கின்றது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காருக்கு முன்பதிவு கட்டணமாக ₹ 21,000 வசூலிக்கப்படுகிறது. வரும் மார்ச் மாதம் மத்தியில் விற்பனைக்கு கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது முன்பதிவு  தொடங்கியுள்ளது.

Exit mobile version