Categories: Car News

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி முன்பதிவு துவங்கியது

tata Altroz iCNG

பிரசத்தி பெற்ற அல்ட்ராஸ் காரில் iCNG என்ற பெயரில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு கொண்டு இயங்கும் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு தொகை ரூ.21,000 கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் மே மாதத்தில் டெலிவரியை துவங்கவுள்ளது.

XE, XM+, XZ மற்றும் XZ+ வேரியண்ட்களில் அல்ட்ராஸ் சிஎன்ஜி பெற்றுள்ளது. டாப் வேரியண்டில் 7.0-இன்ச் தொடுதிரை, டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன்,  சன்ரூஃப், 16-இன்ச் அலாய் வீல். , இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு, உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, லெதரெட் இருக்கை, பின்புற ஏசி வென்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் ஸ்டெபிளிட்டி கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பெறுகிறது.

1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் பயன்முறையில், 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. CNG பயன்முறையில் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பம் கொண்ட 60 லிட்டர் (ஒவ்வொரு சிலிண்டருக்கும் 30லி) மொத்த சிஎன்ஜி கொள்ளளவை கொண்டுள்ளது. மேலும் இந்த சிலிண்டர் பெரிய பூட் இடத்தை உறுதி செய்வதற்காக லக்கேஜ் பகுதிக்கு கீழே உள்ளது.