Categories: Car News

அல்ட்ரோஸ் காரின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

டாடா அல்ட்ரோஸ்

டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டாடா அல்ட்ரோஸ் செடான் காரின் டீசரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்பாக, தனது இணையதளத்தில் பல்வேறு முறை டீசர்களை வெளியிட்ட வந்த நிலையில் தற்போது விற்பனைக்கு வெளியிடுவதற்கான டீசரை வெளியிட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சி அரங்கில் 45 எக்ஸ் கான்செப்ட் என்ற மாடலாக முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. 2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கின் உற்பத்திக்கு மிக நெருக்கமானதான மாடலை காட்சிப்படுத்தியது. தற்போது முழுமையான உற்பத்தி நிலையை எட்டியுள்ள மாடல் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடல் 3,988 மிமீ நீளம், 1,754 மிமீ அகலம் மற்றும் 1,505 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,501 மிமீ கொண்டிருந்தது. மேலும், 341 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் உடன் எதிர்பார்க்கலாம்.

வடிவமைப்பு மொழியான இம்பேக்ட் டிசைன் 2.0 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது மாடலாக அல்ட்ரோஸ் விளங்குகின்றது. இந்த காரில் டாடாவின் பாரம்பரிய கிரில் அமைப்புடன் மிக நேர்த்தியான தோற்ற பொலிவு இளைய தலைமுறையினருக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

டாடா ஆல்ஃபா பிளாட்பாரத்தில் (Tata’s ALFA architecture) வடிவமைக்கப்பட்டிருக்கின்ற இந்த பிளாட்ஃபாரம் பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு ஏற்றதாகவும், செடான் , எஸ்யூவி போன்ற மாற்று ரக மாடல்களையும் உருவாக்க இயலும். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என விற்பனைக்கு வரவுள்ளது.

டாடாவின் அல்ட்ரோஸ் காருக்கு போட்டியாக மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற கார்கள் விளங்கும்.

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

1 day ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

1 day ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

1 day ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

1 day ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

2 days ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

2 days ago