Automobile Tamilan

எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் என்ஜினில் டாடா ஹாரியர், சஃபாரி அறிமுகம் எப்பொழுது

டாடா அறிமுகம் செய்துள்ள புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி கார்களில் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹாரியர் எலக்ட்ரிக் மாடல் ஆகியற்றின் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

சமீபத்தில் ஹாரியர், சஃபாரி என இரண்டு எஸ்யூவி மாடலின் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவில் 5 நட்சத்திரங்கள் பெற்றதாக வந்துள்ளது.

Tata Harrier.ev

500 கிமீக்கு கூடுதலான ரேஞ்சு வழங்கும் வகையிலான பேட்டரி பெற்று நெக்ஸான்.இவி காரை விட கூடுதல் ரேஞ்சு வழங்கும் என எதிர்பார்கப்படுகின்ற டாடா ஹாரியர்.இவி கார் அறிமுகம் குறித்தான முக்கிய தகவல் 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

ஆனால் சஃபாரி.இவி மாடல் குறித்து எந்த உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை என தெரியவந்துள்ளது.

Tata Harrier, Safari Petrol

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் காட்சிக்கு வெளியான 1.5 லிட்டர் TGDi டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 168bhp பவர் மற்றும் 280Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் என இருவிதமான ஆப்ஷனை பெற உள்ளது.

சஃபாரி மற்றும் ஹாரியரில் தற்பொழுது உள்ள டீசல் என்ஜின் ஆப்ஷன் தவிர கூடுதலாக 1.5 லிட்டர் TGDi பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல்கள் அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Exit mobile version